தெருவில் பாடிய சிறுமிக்கு அடித்தது அதிர்ஷ்டம்
                  
                     16 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	 
	 
	 
	கேரளாவை சேர்ந்த சிறுமி சிவகங்காவுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
	 
	உலகில் என்ன நடந்தாலும் நொடிப்பொழுதில் நாம் தெரிந்து கொள்கிறோம், முக்கியமான சம்பவங்கள், நிகழ்வுகளும் சமூகவலைத்தளங்களில் வைரலாகின்றன.
	 
	இந்நிலையில் கேரளாவை சேர்ந்த சிவகங்கா என்ற சிறுமி பாடுவதில் வல்லமை படைத்தவர்.சில நாட்களுக்கு முன்னர் வீட்டின் அருகே மைக் பிடித்து சிறுமி பாடும் வீடியோ வைரலானது.
	 
	இதனை பார்த்த மலையாள நடிகர் ஜெயசூர்யா, சிறுமி பற்றிய விபரங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
	 
	இதன்மூலம் சிறுமியை கண்டுபிடித்த ஜெயசூர்யா, தன்னுடைய அடுத்தபடத்தில் பாடும் வாய்ப்பை வழங்குவதாக கூறியுள்ளாராம்.
	 
	அதுமட்டுமின்றி முக்கியமான கதாபாத்திரத்திலும் சிறுமி நடிக்கவுள்ளாராம்.<