முன்னாள் காதலருடன் தொடர்புஸ மேனேஜரை நீக்கிய நடிகை
                  
                     16 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	தன்னுடைய முன்னாள் காதலருடன் தொடர்பில் இருந்ததால், மேனேஜரை வேலையைவிட்டு நீக்கிவிட்டாராம் நம்பர் நடிகை.
	
	தன்னுடைய மேனேஜரை பினாமியாக்கி ஒரு படத்தைத் தயாரித்து நடித்துள்ளார் பெரிய நம்பர் நடிகை. இத்தனைக்கும் அந்த மேனேஜரும் பிசினஸ் பார்ட்டிதான். நடிகையுடன் பல வருடங்கள் நட்பு என்பதால், நடிகையின் முன்னாள் காதலரான தாடிக்கார நடன இயக்குநருக்கும் இந்த மேனேஜர் நல்ல பழக்கம். அந்தப் பழக்கத்தில், நடன இயக்குநரை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கிறார் மேனேஜர். இது நம்பர் நடிகைக்குத் தெரியவர, கடுப்பான நடிகை மேனேஜரை வேலையைவிட்டுத் தூக்கிவிட்டாராம். இப்போது, நடிகையின் கால்ஷீட்டை தற்போதைய காதலரான அந்த இளம் இயக்குநரே கவனித்துக் கொள்கிறாராம்.