சமந்தா-நாக சைதன்யாவின் திருமணத்திற்கு 150 பேருக்கு மட்டுமே அழைப்பா?
                  
                     16 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	நடிகை சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. கடந்த ஜனவரி 29-ம் தேதி நாக சைதன்யா-சமந்தா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் வரும் அக்டோபர் 6-ம் தேதி கோவாவில்  நாக சைதன்யா மற்றும் சமந்தா திருமணம் நடக்கவிருக்கிறது.
	
	இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகளை கோலாகலமாக செய்துவருகிறார்கள். இந்த திருமணம் முதல் நாளில் இந்து  முறைப்படியும், 7ம் தேதி கிறித்துவ முறைப்படியும் நடக்கயிருக்கிறது. இதற்காக இரு வீட்டாரும் வரும் 1ம் தேதியே கோவா  செல்கின்றனர்.
	
	கோவாவில் நடக்கும் இந்த திருமணத்திற்கு மொத்தம் 150 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாம். இதையடுத்து, ஹைதராபாத்தில் 10ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.