தனிக்கட்சி: கமல்ஹாசனின் பேட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு
                  
                     15 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	தனிக்கட்சி தொடங்கவிருக்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் கமல்ஹசான் சமீபகாலமாக தமிழக அரசியல் மற்றும் மத்திய அரசு குறித்து விமர்சனம் செய்துவருகிறார்.
	 
	இதனால், இவர் அரசியருக்கு வரப்போகிறார் என யூகங்கள் எழுந்தன, தற்போது அதனை உண்மையாக்கும்
	 
	அரசியலில் மாற்றம் வேண்டும். புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து இந்த மாற்றம் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
	 
	என்னை சந்தர்ப்பவாதி என்று சொல்லலாம். ஆம், நான் சந்தர்ப்பவாதிதான். இதுதான், நான் தீவிர அரசியலில் ஈடுபட சரியான சந்தர்ப்பம். ஏனெனில் அனைத்துமே தவறாக சென்றுகொண்டுள்ளது.
	 
	நமக்கு சிறந்த அரசு தேவைப்படுகிறது. நான் அவசரகதியில் தீர்வுகள் கிடைத்துவிடும் என சொல்லவில்லை. மாற்றத்தை நான் முன்எடுத்து செல்வேன். இது என் வாழ்நாளில் கூட நிறைவேறாமல் போனாலும் எனக்கு பின் வருபவர்கள் வழி நடத்திச் செல்வார்கள்.
	 
	அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சிதான் தொடங்குவேன். இது எனது விருப்பத்தின் பேரில் நடக்கப்போவது கிடையாது, கட்டாயத்தின்பேரில் நடக்கப்போகிறது.
	 
	ஏனெனில் எனது கொள்கைகளுடன் எந்த கட்சியின் சித்தாந்தங்களும் முழுமையாக பொருந்தவில்லை.
	 
	இந்தியாவில் அரசியல் அமைப்பு தோல்வி அடைந்து விட்டதால், இதில் மாற்றம் வரவேண்டும், ஊழல் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று கருதுகிறேன்.
	 
	5 வருடம் தேர்ந்து எடுக்கப்படும் ஒருவர் சிறப்பாக செயல்படாவிட்டால் 5 வருடங்கள் காத்து இருந்துதான் ஓட்டுப் போட்டு மாற்றும் நிலை இருக்க கூடாது.
	 
	கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால் உடனே அவர்களை மாற்றும் நிலை வரவேண்டும். அப்படி செய்தால்தான் அரசியலில் நல்ல மாற்றம் ஏற்படும்.
	 
	சரியான நேரம் அமைந்தால் மாற்றம் தொடங்கும். அதற்கான வேலைகள் இப்போது தொடங்கி விட்டன. ஊழல் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். நான் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது என்று கூறியுள்ளார்