டாப்சியை கலாய்த்த ரசிகர்
                  
                     15 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	அந்த மிச்சம் இருக்குற டிரைஸ்ஸையும் அவிழ்த்துவிடலாமே! டாப்சியை கலாய்த்த ரசிகர்
	
	தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த டாப்சிக்கு தமிழில் ஆரம்பம், காஞ்சனா 2, வைராஜா வை போன்ற வெற்றி படங்களும், தெலுங்கு, இந்தி மார்க்கெட்டில் நல்ல இடமும் கிடைத்தது
	
	இந்த நிலையில் டாப்சி தற்போது ஜூத்வா 2 என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். வருண்தேவ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் டாப்சி கவர்ச்சியின் உச்சிக்கே சென்றுள்ளார். அதுமட்டுமின்றி முதன்முதலில் டூபீஸ் பிகினி உடையையும் அவர் அணிந்து நடித்துள்ளார்.
	
	பிகினி உடையுடன் கூடிய புகைப்படத்தை டாப்சி தனது டுவிட்டரில் பதிவு செய்தபோது ரசிகர் ஒருவர் ‘அந்த மிச்சம் இருக்குர டிரைஸ்ஸையும் கழட்டிவிட்டால் உங்கள் அண்ணன் உங்களை பற்றி பெருமைப்படுவார்; என்று கலாய்த்துள்ளார்.
	
	இந்த ரசிகருக்கு பதில் கூறிய டாப்சி, ‘எனக்கு அண்ணன் இல்லை இருப்பினும் உங்களுக்கு பதில் கூறியுள்ளார் உங்கள் தங்கை’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.