கணவருடன் கருத்து வேறுபாட்டில் ஒளி நடிகை?
                  
                     15 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	ஒளி நடிகைக்கும், அவர் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்கிறார்கள்.
	
	சினிமாவில் ஒன்றாக நடித்தபோது காதலிக்கத் தொடங்கி, நிஜத்தில் கணவன் – மனைவி ஆனவர்கள் இருவரின் பெயரிலும் ஒளியைக் கொண்டவர்கள். ‘திருமணத்துக்குப் பின் நடிக்க மாட்டேன்’ என்று நடிகை சொன்னதால் தான், நடிகரின் வீட்டில் சம்மதமே கிடைத்தது. ஆனால், ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா?
	
	இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்து, பள்ளிக்கு அனுப்பி தன் கடமைகளை நிறைவேற்றிய பிறகு, ‘நான் நடிக்கப் போகிறேன்’ என்று சொல்ல, குடும்பத்தில் வர்தா புயல் அடித்தது. சண்டை போட்டு ஒரு படத்தில் நடித்தவர், அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டானார். பதறிப்போன கணவர், ‘நம்ம கம்பெனி தயாரிக்கிற படத்துல மட்டும்தான் நடிக்கணும்’ என்று சொன்னார்.
	
	அப்படி கணவர் கதை கேட்டு ஓகே சொன்ன படம்தான் இன்று ரிலீஸாகியிருக்கிறது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்குப் படம் இல்லை. இது, அப்போதே நடிகைக்குத் தெரிந்துவிட்டதாம். ‘வேண்டுமென்றே தான் சுமாரான கதையில் நடிக்கவைத்து மார்க்கெட்டை அழிக்கப் பார்க்கிறார்கள்’ என்று கணவருடன் பேசுவதை நிறுத்தியவர், படத்தின் புரமோஷன்களிலும் கலந்து கொள்ளவில்லை.