பாலியல் தொழிலாளியான சதா!!
                  
                     13 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	டார்ச் லைட்: பாலியல் தொழிலாளியான சதா!!
	
	ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சதா. அந்த படத்தின் வெற்றியால் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என அதிர்ப்பார்க்கப்பட்டது.
	
	 
	
	அதே போல் விக்ரமுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அடுத்தடுத்த படங்களில் அவர் காட்டிய கிளாமர் அவருக்கு கைகொடுக்கவில்லை.
	 
	
	இதனால் கோலிவுட் வாய்ப்புகள் பறிபோக, வேற்றுமொழி படங்களில் கவனத்தை செலுத்தினார். பின்னர் திடீரென வடிவேலுவுடன் எலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதுவும் தோல்வி அடைந்தது.
	 
	
	தற்போது தமிழ், மலையாளத்தில் உருவாகும் ‘டார்ச் லைட்’ படம் மீண்டும் என்ட்ரி ஆகிறார். இந்த படத்தில் பாலியல் தொழிலாளி வேடம் ஏற்றிருக்கிறார் சதா.