விஜய்சேதுபதி பெண் வேட படத்தின் முழு விபரங்கள்
                  
                     13 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மக்கள் செல்வியாக நடிக்கும் படம் ஒன்றின் ஸ்டில் நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவோம்.
	
	இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் நதியா, பகத்பாசில், மிஷ்கின், சமந்தா மற்றும் காயத்ரி பகவதி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
	
	த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படமான இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ‘ஆரண்ய காண்டம்’ இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கவுள்ள இந்த படத்திற்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற டைட்டில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.