விஜய்சேதுபதிக்கு கிடைத்த க்ரீன் சிக்னலால் நயன்தாரா அதிர்ச்சி
                  
                     12 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	மக்கள் செல்வன் விஜயசேதுபதி தொடர்ச்சியாக ‘கவண்’ மற்றும் ‘விக்ரம் வேதா’ என இரண்டு ஹிட் படங்களையும் ‘புரியாத புதிர்’ என்னும் சுமாரான படத்தையும் கொடுத்துள்ள நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த படமான ‘கருப்பன்’ படமும் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
	
	இந்த படம் இன்று சென்சாருக்கு சென்ற நிலையில் சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கொடுத்து க்ரீன் சிக்னல் அளித்துள்ளனர். சென்சார் சர்டிபிகேட் கிடைத்துவிட்டதால் இந்த படம் வரும் ஆயுதபூஜை தினமான செப்டம்பர் 29ல் ரிலீஸ் ஆவது உறுதி என்றும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படம் வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் நயன்தாராவின் ‘அறம்’ படக்குழுவினர் அதிருப்தியும் அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
	
	விஜய்சேதுபதி, தான்யா, பாபிசிம்ஹா, கிஷோர், பசுபதி, லிங்கா, சிங்கம்புலி, ரேணுகா, காவேரி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆர்.பன்னீர்செல்வம் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படம் ஜல்லிக்கட்டு கதையம்சம் கொண்டது என்பதால் மிகபெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.