சூர்யா – ஜோதிகாவின் 11வது திருமண நாள்
                  
                     11 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	சூர்யா – ஜோதிகா இருவரும் தங்களது 11வது திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர்.
	
	ஒன்றாக நடித்தபோது காதல் வயப்பட்ட சூர்யா – ஜோதிகா இருவரும், இருவீட்டாரின் சம்மதத்தின்படி கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு, இன்று 11வது ஆண்டு திருமண நாள். தியா, தேவ் என இரண்டு அழகான குழந்தைக்குப் பெற்றோராகியுள்ளனர்.
	
	குழந்தைகள் பள்ளிக்குப் போக ஆரம்பித்த பிறகு, நடிப்பில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார் ஜோதிகா. ’36 வயதினிலே’ மூலம் தொடங்கிய வெற்றிப் பயணம், ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, மணிரத்னம் படம் எனத் தொடர்கிறது.
	
	சூர்யாவின் கெரியரும் நன்றாகவே வளர்ந்து வருகிறது. ‘தானா சேர்ந்த கூட்டம்’ ரிலீஸுக்குத் தயாராகிவரும் நிலையில், அடுத்து செல்வராகவன் மற்றும் சுதா கொங்கரா இருவரின் படங்களிலும் சூர்யா நடிப்பார் என்ற பேச்சு அடிபடுகிறது. இதில், எந்தப் படம் முதலில் ஷூட்டிங் போகிறது எனத் தெரியவில்லை.