இரட்டை அர்த்தத்தில் சர்ச்சையை கிளப்பும் ஓவியா பட தலைப்பு!
                  
                     11 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	இருட்டு அறையில் முரட்டு குத்து: இரட்டை அர்த்தத்தில் சர்ச்சையை கிளப்பும் ஓவியா பட தலைப்பு!
	
	பிரபல நடிகை ஓவியா நடிக்க இருக்கும் படத்தின் தலைப்பு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் தலைப்பு இரட்டை அர்த்தத்தில் இருப்பதால் அது பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
	
	பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியா, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் அந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்றும், திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறினார்.
	
	இந்த நிலையில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவான ஹரஹர மகாதேவகி படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதே தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ஹீரோயினாக நடிக்க ஓவியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
	
	இந்த படத்துக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஓவியா கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் டைட்டில் இரட்டை அர்த்தத்தில் உள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.