மைக்கேல் மதன காமராஜனில் நடித்த நடிகர் சுதர்ஷன் காலமானார்
09 Sep,2017
பெங்களூர்: தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்த பழம்பெரும் கன்னட நடிகர் ஆர்.என்.சுதர்ஷன் காலமானார். அவருக்கு வயது 78.
உடல்நலக்குறைவு
காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுதர்ஷன், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
60 படங்களில் ஹீரோவாக நடித்தவர் பின்னர், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இதுவரை 250 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் 1939-ம் ஆண்டு மே 2-ம் தேதி பிறந்தவர் சுதர்ஷன். இவரது தந்தை ஆர்.நாகேந்திரா ராவ், கன்னட சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பிரபலமானவர். சுதர்ஷனின் சகோதர்களான ஆர்.என்.கிருஷ்ணா பிரசாத் மற்றும் ஆர்.என்.ராஜகோபால் ஆகியோரும் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட ஹீரோ :
சினிமா குடும்பத்திலிருந்து வந்ததாலோ என்னவோ, சுதர்ஷனும் தனது 21-வது வயதில், நாகேந்திரா ராவ் இயக்கிய, 'விஜயநகரடா வீரபுத்ரா' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். சுமார் 60 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
ஹீரோ வாய்ப்புகளை இழந்தபின் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தார் ஆர்.என்.சுதர்ஷன். தற்போது கன்னட தொலைக்காட்சி சீரியல் ஒன்றிலும் நடித்து வந்தார்.