கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியாவுடன் இந்தி நடிகை காதல்?
                  
                     09 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்-ரவுண்டராக இருக்கும் ஹர்த்திக் பாண்டியாவும், பாலிவுட்டின் முன்னணி நடிகையும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
	கிரிக்கெட் வீரர் வீராட்கோலியும் அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகிறார்கள். காதலும், ஊடலுமாக அந்த கதை போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மற்றொரு கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியாவை நடிகை பரினித்திசோப்ரா காதலிப்பதாக தகவல் பரவி உள்ளது. இந்தி நடிகை பரினித்தி சோப்ரா ஜியோமி செல்போன் குறித்து டுவிட்டரில், ‘ஒரு புகைப்படத்துடன் கேள்விகேட்டு இருந்தார்’. இதை பார்த்த கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியா, பரினித்திக்கு டுவிட்டரில் பதில் போட்டார். இதற்கு நடிகையும் பதில் கொடுத்தார். இருவரும் டுவிட்டரில் மாற்றி மாற்றி பதில் அளிப்பதை பார்த்த ரசிகர்கள் ஹர்த்திக்- பரினித்தி இருவரும் காதலிப்பதாக பேசத் தொடங்கினார்கள். சமூக வலைத்தளங்களிலும் இந்த காதல் வதந்தி வேகமாக பரவியது. இது பரினித்திக்குக்கும் தெரியவந்தது.
	
	இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த பரினீத்தியிடம் நீங்கள் சிங்கிளா? என்று இந்த காதல் பற்றி மறைமுகமாக கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், “நான் சிங்கிளா இல்லையா என்பது வாதம் அல்ல. காதல் வதந்தி குறித்து நானும் கேள்விப்பட்டேன். ஹர்த்திக் பாண்டியாவை நான் காதலிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.