மனதுக்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை : அஞ்சலி
                  
                     08 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	அஞ்சலியும், ஜெய்யும் காதலிக்கிறார்கள் என்று செய்து வரும் நிலையில், மனதுக்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை என்று அஞ்சலி கூறியிருக்கிறார்.
	அஞ்சலியும், ஜெய்யும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகின. ஜெய், அஞ்சலிக்கு தோசை சுட்டுக் கொடுத்த படம் வெளியானது. ஜெய் பிறந்த நாள் விழாவில் அஞ்சலி மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். ‘நானும் அஞ்சலியும் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று ஜெய் சொன்னதாகவும் தகவல் வெளியானது.
	
	இந்த நிலையில், தற்போது ஜெய்யை தனது லிஸ்ட்டிலேயே வைக்காதது போல அஞ்சலி கூறியுள்ளார். இது பற்றி அவர் அளித்த பேட்டிஸ
	
	“எனது திரை உலக பயணம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. எனவே, காதல்-கல்யாணம் பற்றி நினைக்க எனக்கு நேரம் இல்லை. என் மனதுக்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை. தேடிக்கொண்டு இருக்கிறேன். மனதுக்கு பிடித்தவராக யாரும் கண்ணில் தென்படவில்லை. நாளையே அது போல ஒருவர் என் பார்வையில் பட்டால் நிச்சயம் அவரிடம் அதை கூறுவேன். என்னை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக ஜெய் சொன்னது எனக்குத் தெரியாது. என்னையும் அவரையும் சேர்த்து வைத்து நிறைய செய்திகள் வந்து விட்டன. எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும் நிர்ணயிக்க முடியாது. எது எந்த நேரத்தில் நடக்குமோ அது அந்த நேரத்தில் நடக்கும் என்று நம்புகிறேன்.
	
	நான் அரசியலுக்கு வருவதாக சொல்வதில் உண்மை இல்லை. டெல்லி சென்ற போது பாராளுமன்றத்தை சுற்றி பார்த்தேன். உடனே நான் அரசியலுக்கு வருவதாக கூறி விட்டார்கள். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை.”
	
	உண்மையாகவே அஞ்சலி இதை சொல்கிறாரா? இல்லை ஜெய் மீது ஏதோ கோபத்தில் இந்த பேட்டியை கொடுத்தாரா என்பது தெரியவில்லை. ஜெய் இதற்கு பதில் சொன்னால்தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.