ரசிகர்களுக்காக கவர்ச்சி காட்டுகிறேன்: மனம்திறந்த டாப்சி
                  
                     05 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	ரசிகர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் போதுமான அளவு கவர்ச்சி காட்டி நடித்திருப்பதாக நடிகை டாப்சி கூறியிருக்கிறார்.
	
	டாப்சி, வருண் தவான், ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தி படம் ‘ஜூத்வா-2’. இதில் ரம்பா வேடத்தில் டாப்சி கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.
	
	“‘ஜூத்வா-2’ நகைச்சுவை படம். இதில் ஏராளமான நடன காட்சிகள் உள்ளன. இது போல நிறைய கவர்ச்சி காட்சிகளும் உள்ளன. தென் மாநில படங்களில் நான் கவர்ச்சியான பெண்ணாக நடிக்கத் தொடங்கினேன். இந்தி பட உலகில் 3 ஆண்டுகளாக என் படங்களை ரசிகர்கள் ரசித்து ஆதரவு அளித்து வருகிறார்கள். அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் இந்த படத்தில் போதுமான அளவு கவர்ச்சி காட்டி நடித்து இருக்கிறேன்.
	
	நகைச்சுவை, கவர்ச்சி இரண்டும் மாறுபட்ட விஷயங்கள். என்றாலும், இந்த படத்தில் இரண்டும் நிறைய இருக்கிறது. ரசிகர்களுக்கு இது நல்ல விருந்தாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
	
	சமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் டீசரில் டாப்சியின் பிகினி உள்ளிட்ட கவர்ச்சியான காட்சிகளும் இடம்பெற்றிருந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.