பல ஆண்கள் என் மீது கண் வைத்தார்கள்: கங்கனா ரணாவத் 
                  
                     04 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	ஆரம்ப காலத்தில் பல ஆண்கள் என் மீது கண் வைத்தார்கள்: கங்கனா ரணாவத்
	 
	
	ஆரம்ப காலத்தில் பல ஆண்கள் தன் மீது கண் வைத்தார்கள் என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியிருக்கிறார்.
	 
	இந்தி நடிகை கங்கனா ரணாவத் எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி விடுவார். தனது சினிமா வாழ்க்கை பற்றி மனம் திறந்து கூறிய அவர்ஸ
	 
	“ நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் பல ஆண்கள் என் மீது கண் வைத்தார்கள். திருமணம் ஆனவர், திருமணம் ஆகாதவர், இளைஞர்கள், முதியவர்கள் பலர் என்னோடு இருக்க விரும்பினார்கள்.
	 
	எந்த துறையாக இருந்தாலும், ஆண்களை நிராகரித்தால், அவர்கள் மோசமாக நடந்து கொள்வார்கள். இதனால் வேலை பார்க்கும் இடத்தில் சிக்கல் ஏற்படும். அதுவும், உடன் பணியாற்றும் ஆணுடன் படுக்கையை பகிர்ந்தால் பிரச்சினை தான்.
	 
	மிகவும் இளம் வயதில் திருமணமான ஆணின் கண்ணீர் கதையை நம்பக்கூடும். என் மனைவி என்னை அடிக்கிறாள் என்று கண்ணீர் விடுபவரையும் நம்புவோம். நான் இதுவரை திருமணம் ஆன மகிழ்ச்சியான ஆண்களை பார்த்ததே இல்லை.
	 
	25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் கண்ணீர் கதையை நான் நம்பமாட்டேன்.
	 
	ஆனால் 15 முதல் 25 வயதுக்குள் இருக்கும் ஒரு ஆணை மற்றொரு பெண்ணின் கணவர் என்பதை மறந்து, சிறந்த கணவராக நினைக்க வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.