நயன்தாரா, திரிஷா, பாணியில் தமன்னா
                  
                     04 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகள் நயன்தாரா மற்றும் திரிஷாவின் பாணியை நடிகை தமன்னா பின்பற்ற ஆரம்பித்திருக்கிறாராம்.
	
	தமன்னா தற்போது விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்து வருகிறார். இதில், கவர்ச்சி இல்லாத குடும்ப பாங்கான வேடம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சக்ரி டோல்டி இயக்கத்தில் ‘கொலையுதிர் காலம்’ படத்தின் இந்தி பதிப்பில் நடிக்கிறார்.
	
	இந்த படத்தின் இந்தி தலைப்பு ‘காமோஷி’ இதில் தமன்னாவுக்கு முக்கியத்துவமான வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.
	
	இது போல் குணால் கோஹ்லி இயக்கும் தெலுங்கு படத்திலும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரத்தில் தமன்னா நடிக்கிறார். இதில் கல்யாண் ராம் நாயகனாக நடிக்கிறார். இந்த படங்கள் மூலம் நயன்தாரா, திரிஷா பாணியில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தனி இடம் பிடிக்கும் முயற்சியில் தமன்னா இறங்கி இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.