நடிகர்களுடன் படுக்கையை பகிர்ந்தால் பல பிரச்சனை – நடிகை ஓபன் டாக்
                  
                     02 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	சகநடிகர்களுடன் படுக்கையை பகிருந்து கொள்வதாலும், மறுப்பதாலும் பல பிரச்சனைகள் ஏற்படும் என பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ள  கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
	
	ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கங்னா ரனாவது. அதன் பின் அவர் பாலிவுட்டிற்கு சென்றுவிட்டார். ‘குயின்’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி விருதுகளையும் பெற்றார்.
	 
	மேலும், அவர் வெளிப்படையாகவும், தைரியமகாவும் பேசும் சுபாவம் உடையவர் ஆவார். அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி பலரையும் அதிச்சிக்குள்ளாகியிருக்கிறது.
	
	சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் “படுக்கைக்கு அழைக்கும் சக நடிகரை நாம் ஒதுக்கும் போது அதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அதன்பின் அவர்களோடு நாம் நடிக்கும் சூழல் கடினமாக மாறிவிடும். அதேபோல், அவர்களுடன் படுக்கையை நாம் பகிர்ந்து கொண்டால், இன்னும் நிலைமை மோசமாகிவிடும்”  என அவர் தெரிவித்தார்.
	 
	இவரின் இந்த பேட்டி இவருடன் நடித்த சக பாலிவுட் நடிகர்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.