விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ படத்தை கைப்பறிய பெரிய நிறுவனம்
02 Sep,2017
`ரேணிகுண்டா’ புகழ் பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – தான்யா – பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கருப்பன்’ படத்தை பெரிய நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது.
‘விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே `புரியாத புதிர்’ இன்று ரிலீசாகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கருப்பன்’.
`ரேணிகுண்டா’ புகழ் பன்னீர் செல்வம் இயக்கி இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தான்யா நடிக்கிறார். வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். பசுபதி, சரத் லோகிதஸ்வா, சிங்கம் புலி, ரேணுகா, கிஷோர், காவேரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இமான் இசையில் ‘கருப்பன்’ படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி இருக்கிறது.
ஜல்லிக்கட்டை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் உருவாகி இருக்கும் ‘கருப்பன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டி.வி. கைப்பற்றியிருக்கிறது. மேலும் இந்த படத்தின் திரையரங்கு வியாபாரமும் அதிக விலைக்கு போயுள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்கு உரிமையை பிக்சர் பாக்ஸ் கம்பெனி கைப்பற்றியிருக்கிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு மாடுபிடி வீரராக ஜல்லிகட்டு மாட்டை அடக்கும்படியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.