களவாணி’ இரண்டாம் பாகம் ஓவியா சம்மதிப்பாரா ?
31 Aug,2017
‘மஞ்சப் பை’ படத்திற்குப் பிறகு விமல் நடித்து வெளிவந்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
விமல் தற்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் ‘மன்னர் வகையறா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை விமல் அவருடைய சொந்த நிறுவனமான எ3வி சினிமாஸ் மூலம் தயாரித்து வருகிறார்.
நேற்று விமல் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலர் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர். தொடர்ந்து தான் தயாரித்து நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பையும் நேற்று விமல் வெளியிட்டார்.
‘மன்னர் வகையறா’ படத்தை முடித்தவுடன் இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார் விமல். அதனைத் தொடர்ந்து ‘வெற்றிவேல்’ பட இயக்குனர் வசந்தமணி இயக்கதில் நடிக்கயுள்ளார். இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
நடிகர் விமலின் திரையுல வாழ்க்கையை ‘களவாணி’ மூலம் திருப்பு முனையை ஏற்படுத்திய இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாக உள்ள ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் விமல் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் சூரி, கஞ்சா கருப்பு கூட்டணியும் தொடர்கிறது.
‘களவாணி’ படம் மூலம் அறிமுகமான ஓவியா இந்த இரண்டாம் பாகத்தில் தொடர்வாரா என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ். ஓவியா இந்தப் படத்தில் நடிக்க வந்தால் இப்போதே ‘களவாணி’ இரண்டாம் பாகம் ‘கலெக்ஷன் வாணி’ ஆக மாறிவிடும்.
ஓவியாவை நடிக்க சம்மதிக்க வைக்க வேண்டியது இயக்குனர் சற்குணம், விமல் கையில் உள்ளது.