திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை?: செய்தி வெளியாகியதால் பரபரப்பு
                  
                     28 Aug,2017
                  
                  
                     
					  
                     
						நடிகை திருமணம் ஆவதற்கு முன்னால் கர்ப்பம் ஆனதாக வெளியான தகவலால் அதிர்ச்சியடைந்த நடிகை, அதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.
‘ராக்ஸ்டார்’ இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நர்க்கிஸ் பக்ரி. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இவர், பிரசாந்தின் ‘சாகசம்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார்.
மாடல் அழகியான இவருக்கு சினிமா வாய்ப்பு எதிர்பார்த்த அளவு அமையவில்லை. நர்க்கிஸ் பக்ரி இந்தி நடிகர் பிரேம் சோப்ராவை காதலித்தார். அதுவும் கைகூடவில்லை.
சமீபத்தில் விமான நிலையத்தில் நர்க்கிஸ் முகத்தை மறைத்தப்படியே நடந்து சென்றார். அவர், அணிந்திருந்த உடையில் வயிறு பெரிதாக தெரிந்தது. இதையடுத்து நர்க்கிஸ் திருமணம் செய்து கொள்ளாமலேயே கர்ப்பம் ஆனதாக செய்தி பரவியது.
இதை அறிந்த நர்க்கிஸ் பக்ரி, அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பிரேக்கிங் நியூஸ் என்று குறிப்பிட்டு, ‘நான் கர்ப்பமாக இல்லை. ஹாம் பக்கர் சாப்பிட்டதால் வயிறு அப்படி இருந்திருக்கும்’ என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.