நயன்தாரா நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’
                  
                     26 Aug,2017
                  
                  
                     
					  
                     
						நயன்தாரா நடிக்கும் புதிய படத்துக்கு ‘கோலமாவு கோகிலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘மாயா’, ‘டோரா’, ‘அறம்’ என பெண்களை மையப்படுத்தும் கதைகளாக தேடிப்பிடித்து நடித்துவரும் நயன்தாரா, அடுத்ததாகவும் அதேபோன்ற ஒரு கதையில் தான் நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு, ‘கோலமாவு கோகிலா அலைஸ் கோகோ’ எனப் பெயர் சூட்டியுள்ளனர்.  இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ‘நானும் ரெளடிதான்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நயன்தாரா நடிக்கும் படத்துக்கு இசையமைக்கப் போகிறார் அனிருத். இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கிறது.