விமர்சனங்களை மீறி வசூலிக்கும் ‘விவேகம்’
25 Aug,2017
................................
அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ள ‘விவேகம்’ படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 3000 தியேட்டர்களில் வெளியானது.
பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படத்திற்கு பெரும்பாலான விமர்சனங்கள் எதிர்மறையாகவே வந்துள்ளன.
அஜித்திற்கு பில்ட்-அப் கொடுக்கும் படமாக மட்டுமே விவேகம் உள்ளது. வில்லன் கூட அஜித்தின் பெருமையை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார் எனப் பலரும் படத்தைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இருந்தாலும் அனைத்து விதமான விமர்சனங்களையும் மீறி இப்படம் முதல் நாளில் 50 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றிருக்கும் என தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு – 23 கோடி
கேரளா – 3 கோடி
கர்நாடகா – 4 கோடி
ஆந்திரா, தெலுங்கானா – 2 கோடி
வட இந்தியா – 1 கோடி
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை – 3 கோடி
அமெரிக்கா – 3 கோடி
மற்ற வெளிநாடுகள் – 10 முதல் 13 கோடி
ஆக மொத்தம் 50 கோடியிலிருந்து 53 கோடி வரை முதல் நாளில் வசூலித்திருக்கும் என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
2017ம் ஆண்டில் இதுவரை வெளிவந்த படங்களில் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக ஒரு நேரடித் தமிழ்ப் படம் முதல் நாளில் இவ்வளவு தொகை வசூலித்துள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
அடுத்த சில நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் இதே வசூல் தொடர்ந்தால் நான்கு நாட்களில் 200 கோடி வசூலிக்கவும் வாய்ப்புள்ளது.
படத்தின் அனைத்து ஏரியா வியாபரங்களின் கணக்கை வைத்துப் பார்த்தால், திங்கள் கிழமைக்குப் பிறகுதான் படத்தின் வசூல் ரீதியான உண்மையான வரவு, செலவு என்ன என்பது தெரிய வரும். அதன் பிறகே படம் லாபத்தைத் தருமா, நஷ்டத்தைத் தருமா என்பதை சரியாகச் சொல்ல முடியும்.