காலா படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு விபத்து
                  
                     24 Aug,2017
                  
                  
                     
					  
                     
						ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பில் வில்லன் நடிகருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
‘நான் மகான் அல்ல’, ‘நீர்ப்பறவை’, ‘சூது கவ்வும்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர் அருள்தாஸ். இவர் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ’காலா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பில், ரஜினி முன்னிலையில் அருள்தாஸ் மற்றும் குழுவினர் பேசிக்கொண்டிருப்பது போலவும் ஜீப் ஒன்று வேகமாக வருவது போன்றும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது வேகமாக வந்த ஜீப், அருள்தாஸ் மீது மோதியிருக்கிறது. இதில் இடது காலில் உள்ள 3 விரல்களின் மீது ஜீப்பின் டயர் ஏறி இறங்கியது.
இதையடுத்து உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வலியால் துடித்த அவரை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். எலும்பு முறிவு ஏற்பட்டதை உறுதி செய்த மருத்துவர்கள், அவருக்கு சிகிச்சை அளித்து, 10 நாட்கள் ஓய்வு எடுக்குமாறு கூறியிருக்கிறார்கள்.
‘காலா’ படத்தை ரஞ்சித் இயக்கி வருகிறார். ரஜினியுடன் ஹூமா குரோஷி, சமுத்திரகனி, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.