ஸ்டண்ட் யூனியனுக்காக மேடையேறும் காஜல் அகர்வால்
                  
                     24 Aug,2017
                  
                  
                     
					  
                     
						இதுவரை எந்த கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத காஜல் அகர்வால் முதன் முறையாக ஸ்டண்ட் யூனியன் கலை நிகழ்ச்சியில் மேடையேறுகிறார்.
சௌத் இந்தியன் சினி & டிவி ஸ்டண்ட் டைரக்டர்ஸ் & ஆர்டிஸ்ட் யூனியனின் பொன் விழா சென்னையில் வருகிற 26ம் தேதியன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. சுமார் 6.30 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் மேடையேறுகிறார்கள்.
இதுவரை எந்த கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத காஜல் அகர்வால் முதன் முறையாக நடன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதைத் தவிர 10 கதாநாயகர்கள் மற்றும் காமெடி நடிகர்கள், 12 நடிகைகள் நிகழ்ச்சியில் மேடையேறுகிறார்கள். மற்றும் மொட்டை ராஜேந்திரன் உட்பட ஸ்டண்ட் கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
வழக்கமாக பாட்டு, டான்ஸ் என்று நடைபெறும் நிகழ்ச்சியாக இல்லாமல், மேடையில் ஸ்டண்ட் நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக டான்ஸ் மாஸ்டர் கலா செயல்படுகிறார். இந்த நிகழ்ச்சி மாறுபட்ட நிகழ்ச்சியாக இருக்கும் என்று யூனியன் தலைவர் அனல் அரசு தெரிவித்திருக்கிறார்.