விஷாலுடன் கைகோத்த வரலட்சுமி!!
                  
                     23 Aug,2017
                  
                  
                     
					  
                     
						திருட்டு டிவிடி ஒழிப்பில், விஷாலுடன் கைகோத்துள்ளார் வரலட்சுமி.
கடந்த சில வருடங்களாகவே திருட்டு டிவிடிக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் விஷால். ஆரம்பத்தில் தன் படங்களின் திருட்டு டிவிடி வெளியானால் மட்டுமே களத்தில் இறங்கி கையும் களவுமாகப் பிடித்தவர், இரண்டு சங்கங்களில் பொறுப்புக்கு வந்தபிறகு எந்தப் படத்தின் திருட்டு டிவிடியாக இருந்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
 
இந்நிலையில், விஷாலின் காதலி என்று சொல்லப்படும் வரலட்சுமி சரத்குமாரும் திருட்டு டிவிடிக்கு எதிராகக் களமிறங்கியுள்ளார். ஆன்லைனில் தனுஷ் நடித்த ‘விஐபி 2’ படம் பார்த்துக் கொண்டிருந்த தன் கேரவன் டிரைவரைப் பிடித்து லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறார். ‘சினிமாவில் இருப்பவர்களே இப்படிச் செய்தால் என்னாவது?’ என தன் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார் வரலட்சுமி.