57 கிலோ இட்லியில் அஜித் உருவ பொம்மை; ரசிகர்களின் உலக சாதனை
                  
                     23 Aug,2017
                  
                  
                     
					  
                     
						உலக வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு நடிகருக்கு இட்லியில் உருவம் செய்து கொண்டாடுவது அஜித்துக்குதான்.
அஜித் நடித்துள்ள விவேகம் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதற்காக அஜித் ரசிகர்கள் திரையரங்குகளை அலங்கரித்து வருகின்றனர். அஜித்துக்கு சிலை செய்து ஆங்காங்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வட சென்னையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் இட்லியில் அஜித் சிலை செய்து அசத்தியுள்ளனர்.
அஜித் ரசிகர்கள் மற்றும் சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இணைந்து 57 கிலோ எடையில் அஜித் உருவம் கொண்ட பிரமாண்டமான இட்லியை தயார் செய்து வருகின்றனர். இந்த இட்லியை அப்பகுதியில் உள்ள திரையரங்கு முகப்பில் இன்று மாலை வைக்க உள்ளனர்.   
உலக வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு நடிகருக்கு இட்லியில் உருவம் செய்து கொண்டாடுவது அஜித்துக்குதான். அதுவும் தமிழகத்தில் தான் இந்த சாதனை நடைபெற உள்ளது.