தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் கவணம் செலுத்தும் தனுஷ்
                  
                     22 Aug,2017
                  
                  
                     
					  
                     
						தனுஷ் நடித்து வெற்றிப்பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தில் தொடர்ந்து கவணம் செலுத்தி வருகிறார்.
தமிழ் சினிமாவில் அண்மை காலமாக இரண்டாம் பாகம் கலாசாரம் தொடங்கியுள்ளது. இயக்குநர் ஹரி ஆரம்பித்த ஒன்று என்று கூட கூறலாம். வெற்றிப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் தற்போது அனைவரும் கவணம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தனுஷ் குறிப்பாக தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் கவணம் செலுத்தி வருகிறார். அண்மையில் விஐபி படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. அடுத்து மாரி 2 இரண்டாம் பாகத்தின் வேலைகள் தொடங்க உள்ளது. அதன்பின் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் குறித்து தனது அண்ணனுடன் ஆலோசித்து வருவதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.