அஜித்துடன் இணைந்த சிவகார்த்திகேயன்
                  
                     22 Aug,2017
                  
                  
                     
					  
                     
						அஜித்தின் ‘விவேகம்’ படத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தின் டீஸரும் ரிலீஸாகிறது.
 
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் நடித்துள்ள படம் ‘விவேகம்’. இந்தப் படம், நாளை மறுநாள் வெளியாகிறது. இந்தப் படத்துடன், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் டீஸரும் ரிலீஸாகிறது. மோகன் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடிக்க, சினேகா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களுக்குமே அனிருத் இசையமைத்துள்ளார்.