ஆர்யாவிடம் ஹெல்த் டிப்ஸ் கேட்ட நடிகை
                  
                     22 Aug,2017
                  
                  
                     
					  
                     
						ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கிருத்திகா, அவரிடம் இருந்து ஏகப்பட்ட ஹெல்த் டிப்ஸ்களைப் பெற்றுள்ளாராம்.
 
அமீர் இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் படம் ‘சந்தனத்தேவன்’. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படம், 1960களில் நடப்பது போல் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில், ஆர்யாவின் ஜோடியாக கிருத்திகா ஜெயகுமார் நடிக்கிறார். இவர், தெலுங்கில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படத்தில் நடித்தவர்.
“நானும், ஆர்யாவும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹெல்த் மற்றும் ஃபிட்னஸ் குறித்து தான் அதிகம் பேசிக் கொள்வோம். அவர் உடற்பயிற்சியிலும், சைக்கிளிங்கிலும் இப்போதும் தீவிரமாக இருக்கிறார். எங்களுடைய பேச்சு எப்போதுமே என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யலாம், என்ன டயட் என்றுதான் இருக்கும்” என்கிறார் கிருத்திகா.