................................
A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ’88’.
இந்தப் படத்தில் மதன் கதானாயகனாக நடிக்க, கதாநாயகியாக உபாஷ்னா ராய் நடிக்கிறார். மற்றும் டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், ஜி.எம். குமார், பவர் ஸ்டார், அப்புகுட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா, கடம் கிஷன், மீரா கிருஷ்ணன் இவர்களுடன் ஜான் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் மதன் கூறியதாவது,
“இன்று விஞ்ஞானம் ரெக்கக் கட்டிப் பறக்கிறது. பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட செல்போன்களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது. கைக்குள்ளேயே ஒரு உலகத்தைக் கொண்டு வந்த நவீனம் தான் செல்போன். எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாகத் தெரிவிப்பதால் என்ன மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதைத் தான் இதில் அலசி இருக்கிறோம்.
அதிலும் பெண்கள் எதையெல்லாம் பகிரங்கமாகப் பேச கூடாது என்பது தான் இந்தப் படத்தின் ஹைலைட். இதை கமர்ஷியல் கலந்து ஆக்ஷன் படமாக உருவாக்கி இருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர்.
சென்னை, ஆந்திரா, ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
ஜுலை மாதம் 14 ம் தேதி படம் வெளியாகிறது.
இசை – தயாரத்னம்
பாடல்கள் – அறிவுமதி மதன்கார்க்கி
ஒளிப்பதிவு – வெற்றிமாறன்
நடனம் – காதல் கந்தாஸ்
எடிட்டிங் – அவினாஷ்
ஸ்டண்ட் – சக்தி சரவணன்
கலை – ஆரோக்கியராஜ்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
தயாரிப்பு மேற்பார்வை – ராம் பூபால்
இனை தயாரிப்பு – வினோத்
தயாரிப்பு – A.ஜெயக்குமார்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.மதன்
இவன் தந்திரன்’ ௲ ஷ்ரத்தா ஸ்ரீநாத் யார் ?
ஆர். கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ‘இவன் தந்திரன்’ படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். கதாநாயகியாக முதல் முறையாக ‘இவன் தந்திரன்’ படத்தில்தான் நடித்துள்ளார்.
தற்போது நிவின் பாலி ஜோடியாக ‘ரிச்சி’ படத்திலும், மாதவன், விஜய் சேதுபதி நடிக்கும் ‘விக்ரம் வேதா’ படத்திலும் நடித்து வருகிறார்.
கடந்த வருடம் கன்னடத்தில் வெளிவந்து விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட ‘யு டர்ன்’ படம் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். அதற்கு முன்பு மலையாளத்தில்தான் முதல் முதலில் நடிகையாக அறிமுகமானார். 2015ம் ஆண்டு வெளிவந்த ‘கோஹினூர்’ படம் தான் ஷ்ரத்தா நடித்த முதல் படம்.
அப்பா ராணுவத்தில் பணியாற்றியதால் இந்தியாவின் பல நகரங்களில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பின் பெங்களூரில் சட்டம் பயின்று, கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார்.
பொழுது போக்காக நாடகங்களிலும், விளம்பரங்களிலும் நடித்தவருக்கு தென்னிந்தியத் திரையுலகம் கதவைத் திறந்து விட்டிருக்கிறது.
‘இவன் தந்திரன்’ படத்தில் நடித்ததைப் பற்றி ஷ்ரத்தா கூறுகையில்,
“யூ டர்ன்’ திரைப்படம் வெளியான அந்த நேரத்தில் இயக்குநர் கண்ணன் அவர்களின் துணை இயக்குநர் ரஜத் என்னை ‘இவன் தந்திரன்’ படத்தில் நடிப்பது குறித்து தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் பெங்களூரில் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை கூறினார். அதன் பின் சென்னையில் ஸ்க்ரீன் டெஸ்டில் கலந்து கொண்டு 2 கடினமான காட்சிகளில் நடித்து காண்பித்து தேர்வு பெற்றேன். இயக்குநர் கண்ணன் அவர்களின் படம் எனக்கு தமிழில் முதல் படமாக அமைந்திருப்பது பெருமைக்குரி ஒன்றாகும்.
இவன் தந்திரனில் நான் ஏற்று நடித்துள்ள ஆஷா கதாபாத்திரம் அப்படி ஒரு வித்யாசமான பாத்திரம் தான். யூ- டார்னில் நான் சிட்டியில் வாழும் இங்கிலீஷ் பேசும் பெண்ணாக நடித்தேன். இவன் தந்திரனில் வரும் ஆஷா முற்றிலும் புதுமையான கதாபாத்திரம். படத்தில் நான் கடினமாக உழைத்து கஷ்டப்பட்டு முன்னேறிய மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்துள்ளேன். இங்கே உள்ள கல்வி முறையும் அதில் இருக்கும் அரசியலும் என்னை எப்படி பாதிக்கிறது என்பது போல் கதை நகரும்.
கௌதம் கார்த்திக் மிகச்சிறந்த கோ- ஆர்டிஸ்ட். அவர் மிகவும் அமைதியானவர் , நல்ல மனிதர் , எளிதில் யாருடனும் பழகிவிட மாட்டார். அப்படி பழகிவிட்டால் உண்மையான நண்பராக மற்றும் மிகவும் கேரிங்காக இருப்பார். இவன் தந்திரன் தான் ஒரு கதாநாயகியாக எனக்கு முதல் தமிழ் படம். எனக்கு நீளமான வசனம் , உணர்வுபூர்வமான காட்சிகள் போன்றவை எல்லாம் இந்த படத்தில் சவாலான ஒன்றாக இருந்தது.
கௌதம் நான் நன்றாக நடித்தால் என்னை பாராட்டுவார். அப்படி அவர் பாராட்டும் போது அடுத்தடுத்து வரும் காட்சிகளில் நன்றாக நடிக்க வேண்டும் என்று நமக்கே தோன்றும் , ஊக்கம் அளிக்கும் ஒன்றாகவும் இருக்கும். நான் RJ பாலாஜியை ‘காற்று வெளியிடை படப்பிடிப்பின் போது சந்தித்தேன்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை எந்த சந்தேகமாக இருந்தாலும் பாலாஜியிடம் கேட்பேன். என்னுடைய முதல் படத்தில் இருந்து அவரை நன்றாகத் தெரியும் என்பதால் அவரிடம் தமிழ் சினிமாவை பற்றி நிறைய கேட்டுத் தெரிந்துகொள்வேன்.
தமிழ் பேசும் லோக்கல் பெண்ணாக நடித்து நிறைய கற்றுக்கொண்டேன். இயக்குநர் கண்ணனின் படத்தைப் பொறுத்தவரை பெண்களை அவர் மிக அழகாகவும் , போல்டாகவும் காட்டுவார். இந்த படத்திலும் நான் ஏற்று நடித்துள்ள ஆஷா கதாபாத்திரம் அப்படி பட்ட ஒரு கதாபாத்திரமாக தான் இருக்கும்.
இயக்குநர் கண்ணன் எப்போதும் இரவு பகல் பாராமல் உழைக்கக்கூடியவர். இப்போது ஒரு காட்சி முடிந்து எனக்கு பிரேக் கிடைக்கிறது என்றால் எனக்கு மட்டும் தான் அது பிரேக்காக இருக்கும். இயக்குநர் கண்ணன் வேறு நடிகர்களை வைத்து மத்த காட்சியை படமாக்கிக்கொண்டு இருப்பார் இது தான் அவருடைய தனித்தன்மை. உழைப்பு என்றால் அது இயக்குநர் கண்ணன் தான். ‘இவன் தந்திரன்’ கண்டிப்பாக இளைஞர்களுக்குப் பிடிக்கும் ஒரு படமாக இருக்கும்,” என்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
தோட்டம் – விரைவில்ஸதிரையில்ஸ
ப்ளு ஐ பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் படம் ‘தோட்டம்’.
இந்தப் படத்தில் சிங்கை ஜெகன் நாயகனாக நடிக்க, நாயகிகளாக தனா மற்றும் விவியா ஷான் என்ற சீன நடிகை நடிக்க, முக்கிகிய வேடத்தில் கே.எஸ்.மணியம் நடிக்கிறார். மற்றும் ரூபன் லோகன் தியாகு, ஜீவி. அகில்வர்மன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் அரங்கண்ணல் ராஜ் கூறியதாவது,
“ஒவ்வொரு நாடும் அந்த நாட்டின் விவசாய வருமானத்தைக் கொண்டே பொருளாதார முன்னேற்றம் அடைய முக்கியக் காரணம். இலங்கை, மலேசியா போன்ற சில நாடுகளும் இதில் அடங்கும். அந்த விவசாயக் கூலித் தொழிலாளியாகப் பயன்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே, அதிலும் குறிப்பாகத் தமிழர்களே.
அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்களும் பெரும் வணிக சந்தையாகி விட்டது. தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது. அப்படி உருவாக்கிய தோட்டங்கள் இன்று பல ஆதிக்க சக்திகளிடம் கை மாறி விட்டது. அப்படி கை மாற இருந்த ஒரு தோட்டத்தை போராடி எப்படி மீட்கிறார்கள் என்பதுதான் ‘தோட்டம்’ படத்தின் கதை.
200 வருடங்களாக நடந்து வரும் இந்த பிரச்சனையை இதில் அலசியிருக்கிறோம். அதே போல கலப்பு திருமணங்களை ஆதரிக்கும் விதமாக தமிழ்ப் பையனுக்கும் சீனப்பெண்ணுக்கும் கல்யாணம், மற்றும் தமிழ் படிப்பின் அவசியம் போன்ற சமூக விஷயங்களையும் இதில் சொல்லி இருக்கிறோம்.
மலேசிய நடிகர், நடிகைகள், தமிழ் தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து ‘தோட்டம்’ படத்தை உருவாக்கி உள்ளோம். விரைவில் உலகமெங்கும் இப்படம் வெளியாக உள்ளது,” என்றார் இயக்குனர்.
இசை – சாய்
பாடல்கள் – நா.முத்துக்குமார், அண்ணாமலை, மாணிக்க சண்முகம்
ஒளிப்பதிவு – சதீஷ் B சரண்
எடிட்டிங் – வினோத்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அரங்கண்ணல் ராஜ்