.......................
‘மஞ்சப்பை’ ராகவா இயக்கத்தில் ஆர்யா, கேத்ரின் தெரஸா நடிப்பில் ஏப்ரல் 14-ல் ரிலீஸாகிறது ‘கடம்பன்’. ‘ஜில்லா’விற்குப் பிறகு, ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ன் பெரிய பட்ஜெட் படம். படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியின் மெயின் அட்ராக்ஷன் ‘லவ் பாய்’ ஆர்யாதான். க்ளீன் ஷேவ், நீள முடிகளுடன் சுற்றித்திரிந்தவர், இனி முறுக்கு மீசை ஆர்யா.
“தமிழ்சினிமாவைச் சர்வதேச அளவுக்கு இந்தப் படம் கொண்டுப்போகும். சினிமா கேரியரில், நான் அதிகம் எதிர்பார்க்கிறது இந்தப் படத்தோட ரிலீஸ் தான்.
அந்த அளவுக்கு எமோஷனலான கதை. படத்திற்காக 96 கிலோ வரைக்கும் உடல் எடையைக் கூட்டி, மறுபடியும் 85 கிலோ வரைக்கும் குறைச்சேன்.
இப்ப பாருங்க எப்படி இருக்கேன்னு?’’ என்று நெஞ்சை நிமிர்த்திப் பேசுகிறார் ஆர்யா. “ஷூட்டிங்கிற்காக தினமும் 45 நிமிடம் மலைமேல நடந்துதான் போகணும்.
அடிப்படை வசதிகளே இல்லாத அடர்ந்த காடு அது. அந்தமாதிரியான டெரர் மலைக்கிராமத்து பெண் கேரக்டர்தான் கேத்ரினுக்கு. காட்டுவாசிப் பெண்ணாகவே வாழ்ந்தாங்க. ‘நடுக்காட்டுல மாட்ட வச்சுட்டாங்களே’னு புலம்பினாலும், நடிப்பில் அசத்தியிருக்கிறார். என்னை விட அதிகமாகவே இந்தப் படத்திற்காக உழைச்சிருக்கார்”.
பல லட்சம் செலவுல ஒரு ‘மலை’ செட் போட்டோம். ஒரு காட்சியில் 100 அடி மலையிலிருந்து குதிக்கிறமாதிரி சீன். அந்தக் காட்சி படமாக்கும் போது, ஒட்டுமொத்த செட்டே ஆடத் தொடங்கிடுச்சு.
முதல்முறையா ஷூட்டிங் ஸ்பார்ட்ல பயந்தது அப்போ தான். நான் மட்டுமில்ல, ஒட்டுமொத்த யூனிட்டே மிரண்டு போய்தான் இருந்தாங்கஸ” என்று த்ரில்லிங்காக சொல்லி முடித்தார் ஆர்யா.
“கார்ப்பரேட் அரசியலுக்கு எதிரானவன் கடம்பன். சமூகப் பிரச்னையைக் கருத்தாகச் சொல்லாமல் காதல், அதிரடி, கமர்ஷியல் என கலந்துகட்டிச் சொல்லியிருக்கோம்.
கார்ப்பரேட் நிறுவனங்களால் காட்டு வளங்கள் அழிக்கப்படுவது தான் படத்தோட ஒன்லைன். காடு அழிக்கப்பட்டால், அதன் விளைவு எப்படியிருக்கும்னு படம் பார்க்கும்போது நீங்க உணர்வீங்க.
கூடவே, மலைவாழ் மக்களின் வாழ்வியலையும் இந்தப் படம் பதிவுசெய்திருக்கு. அடர்காடுங்கிறதுனால பூச்சி, வண்டுகளோட கடியில இருந்து யாரும் தப்பிக்கமுடியாது.
ஆனால் இதைக் குறையா யாரும் சொன்னதில்லை. குறிப்பா ஆர்யா முகம் சுழிச்சது கூட இல்லை. கடம்பனாகவே வாழ்ந்திருக்கார். படம் முழுக்க பசுமையான நினைவுகள்தான். கடம்பன் ஒரு பசுமை புரட்சி!
தாய்லாந்துல தான் க்ளைமேக்ஸ் ஷூட்டிங். அதுவும் 50 யானைகளை ஓட விட்டு அதற்கு நடுவுல ஆர்யா சண்டை போடணும். ‘யானைகளுக்கு நடுவே சண்டை’னு ஈஸியா கதை எழுதிட்டேன்.
ஆனா நேர்ல 50 யானைகளைப் பார்த்ததும் கை கால்கள் உதறிடுச்சு. எனக்கே இப்படின்னா, எந்த டூப்பும் இல்லாம, சண்டை போட்ட ஆர்யாவோட நிலையை யோசிச்சிப்பாருங்க? மொத்தத்தில் ‘கடம்பன்’ வேற லெவல் அட்வென்சர்” என்கிறார் இயக்குநர் ராகவா.
படத்தில், யுகபாரதி வரிகளில்.. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ‘கடம்பன்’ மூலம் ஆர்யாவுடன் பத்தாவது முறையாக, யுவன் இணைந்துள்ளார்.
யுவனின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், டிரெய்லரும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.