கமல்ஹாசனின் சர்ச்சை கருத்து
                  
                     28 Mar,2017
                  
                  
                     
					  
                     
						
			  
 

 
கமல்ஹாசனின் சர்ச்சை கருத்து! மகள் அளித்த அதிரடி பேட்டி
மகாபாரதம் குறித்த கமல்ஹாசனின் சர்ச்சை கருத்துக்கு அவரது மகளும், நடிகையுமான அக்ஷராஹாசன் பதிலளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். குறித்த பேட்டியில் கமல் மகாபாரதம் குறித்து சர்ச்சைக் கருத்து கூறியதாக அவர் மீது பழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து ஐஃபா விருதுகள் வழங்கும் திரைப்பட விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்ஷராஹாசன் கூறியதாவது, எதைப் பற்றி பேசுவதாக இருந்தாலும் அப்பா ஆழமாக யோசித்த பிறகே பேசுவார்
மகாபாரதம் பற்றி அப்பா சொன்ன கருத்துக்கு குறித்து கேட்கிறார்கள். அப்பா எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார். வரலாற்றை திரும்பி பார்த்தால் அவரது பயணத்தில் இதுபோல் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியுள்ளார் என கூறியுள்ளார்.