கணவர் என்னை தினம் அடித்து உதைத்தார்: பிரபல நடிகை பரபரப்பு குற்றசாட்டு
                  
                     17 Mar,2017
                  
                  
                     
					  
                     
						
			  
			  
             
 
கணவர் என்னை தினம் அடித்து உதைத்தார்: பிரபல நடிகை பரபரப்பு குற்றசாட்டு
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை வீணா மாலிக், இந்தி மற்றும் தென் இந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும் இவர் கணவர் ஆசாத் பஷீர்க்கும் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் இருவரும் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வீணா மாலிக் கலந்து கொண்டார்.
அதில் விவாகரத்துக்கான காரணத்தை வீணா கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அவரின் முன்னாள் கணவர் ஆசாத்தும் கலந்து கொண்டார்.
அதில் பேசிய வீணா, ஆசாத் என்னை அடித்து துண்புறுத்தியதுடன் மன ரீதியாக கொடுமைப்படுத்தினார் என குற்றம்சாட்டினார்.
அதற்கு ஆசாத் அந்த இடத்திலேயே மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல், தன்னுடன் சேர்ந்து வாழ வீணாவை அழைத்தார். இதனை கேட்ட வீணா, தனது கணவரை மன்னித்து விட்டதாக கூறினார்