விபத்தில் காலை இழந்த இளம்பெண்: நடன கலைஞராக சாதித்த ஆச்சரியம்
09 Mar,2017
விபத்தில் காலை இழந்த இளம்பெண்: நடன கலைஞராக சாதித்த ஆச்சரியம்
இந்தியாவில் விபத்தில் ஒரு கால் எடுக்கப்பட்டாலும் தன்னம்பிக்கையுடன் நடனத்தில் அசத்தி வரும் பெண்ணின் வாழ்க்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சண்டிகர் மாநிலத்தை சேர்ந்தவர் Shubh Kaur Ghumman (27), சில வருடங்களுக்கு முன்னர் இவர் கல்லூரியிலிருந்து தனது ஸ்கூட்டியில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது நிலைதடுமாறி Shubh கீழே விழுந்துள்ளார். அவரின் இடது காலில் பலமான அடி பட்டுள்ளது.
அவர் காலை சோதித்த மருத்துவர்கள், இடது காலை சரி செய்ய முடியாது என கூறிவிட்டனர்.
பின்னர் அவர் இடது காலை மருத்துவர்கள் அகற்றி விட்டனர். இதையடுத்து வீட்டுலேயே முடங்காத Shubh தன்னம்பிக்கையுடன் தனக்கு பிடித்த நடனத்தை தன் வாழ்க்கையாக தெரிவு செய்தார்.
ஒற்றை காலுடன் நடன பள்ளியில் சேர்ந்து இன்று சிறந்த நடன மங்கையாக Shubh ஜொலிக்கிறார்.
பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தற்போது நடனமாடி அசத்தும் Shubh தன்னம்பிக்கை என்ற சொல்லுக்கு சிறந்த உதாரணம் என்பதில் சந்தேகமில்லை.