ஐஸ்வர்யா ராயால் மனைவியை பிரிந்த அமிதாப்பச்சன்?
                  
                     24 Jan,2017
                  
                  
                     
					  
                     
						
			  
			  

              
ஐஸ்வர்யா ராயால் மனைவியை பிரிந்த அமிதாப்பச்சன்?
 
பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் இந்தியாவின் நட்சத்திர குடும்பமாக திகழும் அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு மருமகளாக சென்ற நாள் முதல் ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே மனஸ்தானம் இருந்து வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
கணவர் அபிஷேக்குடன் ஐஸ்வர்யாக ராய்க்கு ஏற்பட்ட பிரச்சனையைவிட, மாமியார் ஜெயா பச்சனுடன் ஏற்பட்ட பிரச்சனைதான் அதிகமாக ஊடகங்களில் வெளியாகின.
மாமியார் சொல்பவற்றை ஐஸ்வர்யா ராய் கேட்காமல் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதனால் கூட்டுக்குடும்பமாக இருக்கும் இந்த குடும்பத்திற்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய்க்கும், ஜெயாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால், தனது கணவரை விட்டு ஜெயா பிரிந்துசென்றுவிட்டார்.
இருவரும் தங்களுக்கு சொந்தமான வேறு வேறு பங்களாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை சமாஜ்வாடி கட்சி தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான Amar Singh கூறியுள்ளார்.
இவர் அமிதாப்பச்சனின் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது