சமந்தா நடிப்பதாக இருந்த சாவித்திரி வேடத்தில் நித்யா மேனன்?
                  
                     22 Dec,2016
                  
                  
                     
					  
                     
						
			  
			  
              

சமந்தா நடிப்பதாக இருந்த சாவித்திரி வேடத்தில் நித்யா மேனன்?
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தெலுங்கில் ‘மாகநதி’ என்கிற பெயரில் படம் உருவாக  இருக்கிறது. இப்ப்டத்தில் நடிகை சாவித்திரி வேடத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார் என செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் நடிக்கவில்லை. அதற்குப் பதிலாகப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் பார்வை வழியாக சாவித்திரியின் வாழ்க்கை  சொல்லப்படுவதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் நடிகை சாவித்திரி 1935-ல் ஆந்திராவில் பிறந்த இவர் 1981-ல் தனது 46-வது வயதில் மரணம் அடைந்தார்.  கதாநாயகியாக இருந்தபோது செல்வ செழிப்பில் வாழ்ந்த அவர் சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து சம்பாதித்த  பணத்தையெல்லாம் இழந்து கடைசி காலத்தில் வறுமையில் சிக்கி கஷ்டப்பட்டு இறந்தார். இந்த நிகழ்வுகளையெல்லாம்  காட்சிப்படுத்தி சாவித்திரி வாழ்க்கை கதை படமாகிறது. 
 
சாவித்திரி வேடத்தில் நடிக்க நித்யா மேனன், வித்யா பாலன் ஆகியோரிடம் பேச்சு நடத்தி வருகின்றார்களாம். இதில் சாவித்திரி  வேடத்தில் நடிக்க நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சாவித்திரிக்கு இணையான உயரத்தில் இருப்பதாலும், முக தோற்றம் பொருந்தி இருப்பதாலும் நித்யா மேனனை தேர்வு செய்ததாக சொல்லப்படுகிறது. நித்யா  மேனனும் சாவித்திரி வேடத்தில் நடிக்க மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாகவும். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.