உடல்நலக் குறைவால் பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு!
23 Nov,2016
உடல்நலக் குறைவால் பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு!
பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா (வயது 86) சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் காரணாமாக சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள இல்லத்தில் இன்று பாலமுரளி கிருஷ்ணா உயிர் பிரிந்தது. ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சங்கரகுபதம் கிராமத்தில் பாலமுரளி கிருஷ்ணா பிறந்தார். இவர் 6 வயதில் கச்சேரி செய்து தனது இசைப்பயணத்தை தொடங்கியவர். கவிக்குயில் படத்தில் அவர் பாடிய சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடல் மிக பிரபலம் ஆகும். இதேபோல் திருவிளையாடல் படத்தில் பாடிய ஒரு நாள் போதுமா உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலம் ஆகின. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ளார்.
400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பாலமுரளி கிருஷ்ணா இசை அமைத்தும் உள்ளார். மத்திய அரசின் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருதும் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.