தந்தையை தொடர்ந்து சினிமாவிற்கு அறிமுகமாகும் ஜெயம் ரவியின் மகன்!
மிருதன் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவி – சக்தி சௌந்தரராஜன் கூட்டணி மீண்டும் இணைந்து உருவாக்கிவரும் படம் ‘டிக் டிக் டிக்’. இது இந்திய சினிமாவின் முதல் ஸ்பேஸ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயம் ரவியின் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமும் இதுதான்.
இந்நிலையில் இப்படத்தில் தனது மகன் ஆரவுடன் தான் இணைந்து நடித்து வருவதாக நடிகர் ஜெயம்ரவி மகிழ்ச்சி பொங்க டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதேபோல் இளையதளபதி விஜய்யும் தனது மகன் மற்றும் மகளுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டுவிட்டரில் கடைசியா சேர்ந்த நபர் நானாக தான் இருப்பேன்: - காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் தற்போது கவலை வேண்டாம் படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். அண்மையில் இவர் ஒரு பேட்டியில் தன்னுடைய டுவிட்டர் அனுபவம் குறித்து பேசியுள்ளார்.அப்போது அவர், டுவிட்டரில் கடைசியா சேர்ந்த நபர் நானாக தான் இருப்பேன். மூன்று மாதங்களுக்கு முன் தான் இணைந்தேன், அதைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டேன். என்னை பற்றிய விஷயங்களை என் ரசிகர்களிடம் பகிர, பல சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
சவுந்தர்யா இயக்கத்தில் தனுஷ்!
சவுந்தர்யா - தனுஷ் புது முடிவு 11/10/2016 2:39:14 PM கோச்சடையான் படத்தை இயக்கிய ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா. கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டதையடுத்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதையடுத்து மீண்டும் திரையுலகில் முழுகவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார். புதிய படம் இயக்க முடிவு செய்தவர் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்க முடிவு செய்தார். ஹீரோவாக மோகன்லால் மகன் ஜீத்து ஜோசப்பை நடிக்க வைக்க பேச்சு நடந்தது. அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து தந்தை ரஜினியிடம் ஆலோசித்தபோது, தனுஷை நாயகனாக வைத்து இயக்க யோசனை கூறினார்.
தனுஷுடம் பேசியபோது, ஏற்கனவே தான் நடித்து வெற்றி பெற்ற, வேலையில்லா பட்டதாரி படத்தின் 2ம் பாக கதை வசனத்தை தான் எழுதுவதாகவும் அதற்கு திரைக்கதை அமைத்து இயக்கும்படி சவுந்தர்யாவிடம் தெரிவித்தார் தனுஷ். அதை ஒப்புக்கொண்டார். இப்படத்தின் இசை அமைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், கதாநாயகி தேர்வு நடக்கிறது. ஏற்கனவே இயக்குவதாக இருந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை சவுந்தர்யா நிறுத்தி வைத்திருக்கிறார்.
ஏ பட கதையை தயாரிக்க மறுத்த இயக்குனர் பாண்டிராஜ்!
நட்ராஜ், ஈராஸ் சாகர், ராஜாஜி. சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நடிக்கும் படம் என்கிட்ட மோதாதே. ராமு செல்லப்பா இயக்கம். இதன் ஆடியோ வெளியிட்டில் கலந்துகொண்டு இயக்குனர் பாண்டிராஜ் பேசியது: ராமு செல்லப்பா என்னிடம் உதவி இயக்குனராக சேர வந்தபோது அவரிடம் முதலில் சமைக்க தெரியுமா என்றுதான் கேட்டேன். தெரியாது என்றார். நானே சொல்லிக்கொடுத்தேன். அதன்பிறகுதான் உதவி இயக்குனர் வேலை கற்றுக்கொடுத்தேன். காரணம், கதை விவாதத்தின் போது பல நாட்கள் வெளியே இருக்க நேரிடும். அந்த சமயத்தில் ஓட்டல் சாப்பாடு ஒத்துவராது. அதற்குதான். அவர், சியர்ஸ் என்ற பெயரில் என்னிடம் ஒரு கதை கூறி அதை தயாரிக்க கேட்டார். மறுத்துவிட்டேன். ஏனென்றால் அந்த கதை யு/ஏ வகையறா கதைகூட இல்லை அதுவொரு ஏ ஏ ஏ வகையை சேர்ந்த கதை.
எங்கிருந்து இதுபோன்ற கதையை பிடித்தாய் என்றபோது தன்னுடைய நண்பரின் கதை அதில் தானும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறினார். அதை தயாரிக்க மறுத்தபிறகு வெகுநாட்கள் கழித்து வேறுவொரு கதை கூறினார். அதுதான் என்கிட்ட மோதாதே. கதை, டிரெய்லர் ஈர்க்கும் வகையில் உள்ளது’என்றார்
இனி அப்பிடி பண்ணாதீங்க: - ஜி.வி.பிரகாஷ் ஹீரோயின் அதிரடி!
ஜி.வி. பிரகாஷுடன் இன்று நிறைய இளவட்ட ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். தற்போது விரைவில் வெளியாக போகும் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நிக்கி கல்ராணி.ஏற்கனவே டார்லிங், கோ 2, வேலைனு வந்துட்ட வெள்ளக்காரன் என பல படங்களில் நடித்து வரும் இவர் பிரதமர் மோடியின் திட்டத்திற்கு தனது கருத்தை கூறியுள்ளார். இன்று முதல் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்படுவதால் பலரும் சிரமங்களுக்கு நடுவே ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.
இதனால் நிக்கி கல்ராணி, தயவு செய்து யாரும் புது நோட்டில் எதையும் எழுதாதீங்க, இப்போதிருந்து புதுமையை தொடங்குவோம் என கூறியுள்ளார்.