‘மூன்று முகம்’ ரீமேக்கில் ராகவலா லாரன்ஸ்
                  
                     03 Nov,2016
                  
                  
                     
					  
                     
						
			  
			  
     

         
ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்த ‘மூன்று முகம்’ படம் 1982ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.
ஏ.ஜெகன்னாதன் இயக்கிய அந்தப் படத்தில் ரஜினி நடித்த ‘அலெக்ஸ் பாண்டியன்’ போலீஸ் கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வரும் ஒரு கதாபாத்திரம்.
அந்தப் படத்தை தற்போது ராகவா லாரன்ஸ் ரீமேக் செய்து நடிக்க உள்ளாராம். தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ராகவா லாரன்ஸ் அடுத்து இந்தப் படத்தில்தான் நடிக்க உள்ளார்.
ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் தயாரிக்க உள்ள இந்தப் படத்தின் தயாரிப்பில் உறுதுணையாக ஸ்ரீ மீனாட்சி கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் இருந்து வருகிறார்.
விரைவில் இயக்குனர் மற்ற விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.