பிரபுதேவாவுடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் தமன்னா!
பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெள்ளிக்கிழமை வெளியானது.
இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இந்நிலையில், தர்மதுரை உள்பட தமிழ் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத தமன்னா, தேவி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிரபுதேவாவுடன் அதிகம் பங்கேற்றார். மேலும், தேவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபுதேவா, தமன்னாவை புகழ்ந்து தள்ளினார்.
தமன்னாவின் நடனத்தை வெகுவாக புகழ்ந்தார். இதைகேட்டு அங்கேயே தமன்னா ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த சம்பவங்களையடுத்து பிரபுதேவாவும், தமன்னாவும் காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என தெலுங்கு பட இயக்குனர் ஒருவர் உறுதிபட கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை நயன்தாரவை பிரபுதேவா பிரிந்த பிறகு அவரை பல நடிகையுடன் தொடர்ப்புப் படுத்தி கிசுகிசு வெளியானது. ஆனால், இதுவரை தமன்னாவை எந்த நடிகருடனும் இணைத்து கிசுகிசுக்கள் வெளியானது இல்லை இதுவே முதல் முறை.
இந்நிலையில், தமன்னா பிரபுதேவாவுடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
ஜனதா கேரேஜுக்கு குறி வைக்கும் விஜய்
ரீமேக் படங்கள்தான் பலநேரம் விஜய்யை கை தூக்கிவிட்டிருக்கிறது. அவரது கரியரில் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்த கில்லி, போக்கிரி இரண்டும் தெலுங்குப் படங்களின் ரீமேக்.
சமீபத்தில் ஜுனியர் என்டிஆர், மோகன்லால் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ஜனதா கேரேஜ் சூப்பர்ஹிட்டானது.
அதுபோன்றதொரு வெற்றியை குறி வைத்து எடுக்கப்பட்டதுதான் ஜில்லா. கதை, திரைக்கதை, காட்சிகள் என்று அனைத்திலும் ஜில்லா சொதப்பியது.
இந்நிலையில், ஜனதா கேரேஜின் ரீமேக்கில் நடிக்கலாமா என்ற யோசனை விஜய்க்கு ஏற்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா, விக்ரம் படங்களை விட அதிக வசூல்- ரெமோ முதல் நாள் வசூல் சாதனை
சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே தற்போது ஹிட் என்ற நிலை வந்துவிட்டது. நேற்று வெளியான ரெமோ படத்திற்கு பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளது.
இப்படம் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளிவந்துள்ளது, சென்னையில் ஏதோ ரஜினி, அஜித், விஜய் படம் போல் காலை 5 மணி காட்சியே தொடங்கியது.
இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ 7-8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம் இந்த வருடத்திலேயே கபாலி, தெறிக்கு பிறகு முதல் நாள் வசூலில் ரெமோ தான் இடம்பிடித்துள்ளது.
மேலும், இருமுகன் முதல் நாள் ரூ 5.5 கோடி, 24 ரூ 5 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது