ரஜினி மகள் படத்தில், சூப்பர் ஸ்டார் யார் ?
05 Oct,2016

கபாலி திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் வசூலில் மாபெரும் சாதனை படைத்த படம். இந்த படத்தின் கேரள உரிமையை நடிகர் மோகன்லால் வாங்கினார். கேரளாவிலும் கபாலி திரைப்படம் செம்ம ஹிட் ஆனதால், அவருக்கு ரூ 10 கோடிகளுக்கு மேல் லாபம் கிடைத்தது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த மோகன்லால், இதற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என நினைத்தார். இதனால் ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்க இருக்கும் புதிய படத்தில் தன் மகனை ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார்.
தற்போது, சௌந்தர்யாவும் தனது படத்திற்கு புது முகங்கள், அல்லது நட்சத்திரங்களுடைய வாரிசு நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்க, இந்த செய்தி மோகன்லாலுக்கு ஒரு வர பிரசாதமாக அமைந்தது.