அப்புக்குட்டியை பீல் பண்ண வைத்த அஜித்
அஜித்தின் வீரம், வேதாளம் ஆகிய படங்களில் அவருடன் நடித்தவர் அப்புக்குட்டி என்கிற சிவபாலன். இதையடுத்து தற்போது அஜித்-சிறுத்தை சிவா இணைந்துள்ள மூன்றாவது படத்திலும் அப்புக்குட்டி நடித்து வருகிறார்.
அப்புக்குட்டிக்காக தனியாக போட்டோ ஷுட் எல்லாம் நடத்தி அவரது கெட்டப்பையே மாற்றியவர் அஜித். இதற்கிடையில், அப்புக்குட்டி கதாநாயகனாக ‘காகித கப்பல்’ என்ற படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அஜித்தை பற்றி ஒவ்வொரு முறையும் அப்புக்குட்டி புகழ்ந்து வந்தாலும், தற்போது அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று அப்புக்குட்டி பீல் பண்ணும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில் போட்டோ ஷுட்டிற்கு பிறகு அப்புக்குட்டி இப்போது ஹீரோவாக நடிக்கும் ‘காகித கப்பல்’ ஆடியோ விழா நடந்த சமயத்தில் அஜித் அவருக்கு போன் போட்டு வாழ்த்து சொல்லியுள்ளார். இதனால் அப்புக்குட்டிக்கு மிகவும் பெருமையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளதாம். அவர் இப்படி வாழ்த்து சொல்வாருன்னு அப்புக்குட்டி கொஞ்சம்கூட எதிர்பார்க்கவே இல்லை என்கிறார்.
இப்படத்தில் அப்புக்குட்டிக்கு டூயட் பாடல் ஒன்று உள்ளதாம். அதில் அப்புக்குட்டி நடனம் ஆடி அசத்தியிருக்கிறாராம். பொருத்திருந்து பார்ப்போம்
தவறை உடனே தட்டி கேட்க வேண்டும்: - களத்தில் இறங்கிய இளைய தளபதி ரசிகர்கள்!
இளைய தளபதியின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. விஜய் ரசிகர்கள் அவர்களால் முடிந்த உதவியை நற்பணி இயக்கம் மூலம் செய்து வருகின்றனர்.மேலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றனர். நேற்று திடிரென்று கடலூர் மாவட்டத்தில் திருட்டு விசிடிகளை ஒழிக்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பேரணி நடத்தி மனு கொடுத்தனர்.இதில் விஜய் படம் மட்டுமில்லை, மற்ற நடிகர்களின்(தொடரி, ஆண்டவன் கட்டளை படங்கள் கடந்த வாரம் திரைக்கு வந்தது) படங்கள் மீதும் எங்களுக்கு அக்கறை உண்டு, தவறை உடனே தட்டி கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

சூர்யா மிகவும் திறமையான நடிகர்: - புகழ்ந்து தள்ளிய பிரபல பாலிவுட் நடிகர்
சூர்யாவின் மார்க்கெட் தற்போது தமிழகம் தாண்டி கேரளா, ஆந்திராவிலும் வளர்ந்துள்ளது. ஆனால், இவருக்கு பாலிவுட்டிலும் செம்ம வரவேற்பு இருந்து வருகின்றது.இவர் நடித்த சிங்கம், கஜினி ஆகிய படங்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர்களே ரீமேக் செய்து நடித்துள்ளனர்.இதுமட்டுமின்றி இவர் ரத்த சரித்திரம் என்ற நேரடி ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார்.சமீபத்தில் இவரின் புகைப்படத்தை பார்த்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ‘சூர்யா மிகவும் திறமையான நடிகர், அவரின் ரத்த சரித்திரம் படம் மிகவும் பிடிக்கும்.அவரின் சிங்கம் மீசை கம்பீரமாக உள்ளது’ என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமில்லை: - வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு மிகவும் ஜாலியான மனிதர். அவர் மட்டுமின்றி இவரின் படப்பிடிப்பு தளம் கூட அப்படித்தான் இருக்குமாம். இவர் விஜய், அஜித்தை வைத்து மங்காத்தா-2 எடுப்பதாக ஒரு செய்தி நேற்று உலா வந்தது.இது ரசிகர்கள் பலராலும் அதிகமாக ஷேர் செய்ய, இதை பார்த்த வெங்கட் பிரபு கிண்டலாக பதில் அளித்துள்ளார்.இதில் ‘எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

உன்னுடையை மரணத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை: - விஜய் ஆண்டனி
பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். விஜய் ஆண்டனியின் முக்கிய பாடலாசிரியராக விளங்கியவர் அண்ணாமலை.இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள், அண்ணாமலை வரிகளில் வேலாயுதம் படத்தில் என் உச்சி மண்டையிலெ சுர்ருங்குதே, அதன் பின் பிச்சைகாரன் படத்தில் பெண்களின் மனதை கவர்ந்த நெஞ்சோரத்தில் ஆகிய பாடல்களால் பிரபலங்களிடையே பெரிதும் பேசப்பட்டார்.

தற்போது அண்ணமலையின் பிரிவை தாங்காத விஜய் ஆண்டனி தனது பேஸ்புக் பக்கத்தில் உன்னுடையை மரணத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை எனவும், நீ இல்லாமல் என்னுடைய எதிர்காலம் என்ன ஆகும் என வருத்ததுடன் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் ரெமோ படத்துக்கு U சான்றிதழ்!
சிவகார்த்திகேயனின் ரெமோ படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் இருக்கிறது.படம் உருவாகிய விதமும், படத்தின் வியாபாரமும் ரசிகர்களை பிரம்மிக்க வைக்கிறது.பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் பி.சி. ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, சீன் பூட், அனிருத் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிந்துள்ளனர்.இப்படம் வருகிற அக்டோபர் 7ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், படம் அண்மையில் சென்சாருக்கு சென்றிருந்தது.இந்நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்துக்கு U சான்றிதழ் வழங்கியுள்ளனர்.