நாயகி வெற்றி தருமா?
த்ரிஷா நடித்திருக்கும் நாயகி மையப்படம் நாயகி. தமிழ், தெலுங்கில் தயாரான இந்தப் படம் தெலுங்கில் மட்டும் வெளியானது. ஆனால், அங்கு படம் சரியாகப் போகவில்லை.
இந்நிலையில், தமிழில் நாயகி வெற்றி தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாயகி படத்தின் கதை இரண்டு காலகட்டங்களில் நடக்கிறது. அதில் எண்பதுகளில் கதை நடக்கும் பகுதி முக்கியமானது. அதில் இருபது வயது இளம் பெண்ணாக த்ரிஷா வருகிறார். அதற்காக உடல் எடையை அவர் குறைத்துக் கொண்டார்.
நாயகியின் முக்கியமான விஷயம், த்ரிஷா முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் படம் இது.
அனுஷ்காவும், நயன்தாராவும் நாயகி மையப்படங்களில் பட்டையை கிளப்புகையும் அதே வெற்றி தனக்கும் அமையுமா என்று எதிர்பார்க்கிறார் த்ரிஷா.
எல்லாம் ரசிகர்கள் கையில்
காவிரி விவகாரம் ரஜினியை கோர்த்துவிடும் பாஜக!
இந்த விவகாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க வேண்டும் எனவும், தமிழக மக்களுக்கு ஆதரவாக பேச வேண்டும் என பரவலாக கோரிக்கை எழுந்து வந்தது. அவர் மௌனமாக இருந்ததை சமூக வலைதளத்தில் பலர் விமர்சித்தனர்.
இந்நிலையில் இந்த கலவரத்தை கண்டித்தும் கர்நாடக அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ரஜினி இந்த விவகாரத்தில் பேச வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆர்பாட்டத்தில் தமிழிசை பேசியபோது, இரு மாநில போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற பிரச்சனைகள் எழும் போது இரு மாநில மக்களுக்கும் நன்கு அறிமுகமான ரஜினிகாந்த் போன்ற திரையுலகத்தினர் பேச வேண்டும் என்றார்.
அ.தி.மு.க.வில் இணைந்த கஞ்சா கருப்பு
சன்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் 91,308 பேர் அதிமுக கட்சியில் இணைந்தனர்.
திமுக, காஸ்கிரஸ், பாமக, பாஜக மற்றும் மதிமுக ஆகிய கட்சியின் நிர்வாகிகள் அதிமுக கட்சியில் இணைந்தனர். இதில் நடிகர் கஞ்சா கருப்பு அவர்களும் இணைந்தார்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது சுயேச்சையாக போட்டியிட்ட முத்துமணிக்கு ஆதரவாக கஞ்சா கருப்பு பிரச்சாரம் செய்தார். அப்போது பேட்டியளித்தவர் கூறியதாவது:-
நான் முதல்வர் ஆனால் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் சேர்த்து முழு கோழி வழங்கப்படும் என்றார். தமிரபரணி படத்தில் வருங்கால ச.ம.உ என்று அவர் செய்யும் சேட்டை அனைவரையும் ரசிக்க வைத்தது.
அதேபோல் தற்போது அதிமுக கட்சியில் இணைந்துள்ள கஞ்சா கருப்பு வருங்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக மாற வாய்ப்புள்ளது.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் 91,308 பேர் அதிமுக கட்சியில் இணைந்தனர்.
திமுக, காஸ்கிரஸ், பாமக, பாஜக மற்றும் மதிமுக ஆகிய கட்சியின் நிர்வாகிகள் அதிமுக கட்சியில் இணைந்தனர். இதில் நடிகர் கஞ்சா கருப்பு அவர்களும் இணைந்தார்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது சுயேச்சையாக போட்டியிட்ட முத்துமணிக்கு ஆதரவாக கஞ்சா கருப்பு பிரச்சாரம் செய்தார். அப்போது பேட்டியளித்தவர் கூறியதாவது:-
நான் முதல்வர் ஆனால் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் சேர்த்து முழு கோழி வழங்கப்படும் என்றார். தமிரபரணி படத்தில் வருங்கால ச.ம.உ என்று அவர் செய்யும் சேட்டை அனைவரையும் ரசிக்க வைத்தது.
அதேபோல் தற்போது அதிமுக கட்சியில் இணைந்துள்ள கஞ்சா கருப்பு வருங்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக மாற வாய்ப்புள்ளது.
ஜோராக விற்பனையாகும் ஆபாச சி.டிக்கள்: போலீஸாரிடம் புகார் செய்ய ரஜினி நாயகி முடிவு
கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. இந்தி, தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சி வேடங்களில் துணிந்து நடித்து வரும் இவரது சமீபத்திய படத்தில் இடம்பெற்றிருந்த படுக்கை அறை காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 20 நிமிடங்கள் அந்த ஆபாச படம் ஓடியது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரோ இந்த காட்சிகளை திருடி வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனுராக் காஷ்யப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் ராதிகா ஆப்தேவின் ஆபாச படம் என்ற பெயரில் அவர் நடித்து வெளி வந்த ஆபாச காட்சிகளை தொகுத்து டிவிடி களாக மும்பையில் பலர் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த சி.டி.க்களை இளைஞர்கள் அதிகம் வாங்கி செல்கின்றனராம்.
இதனை அறிந்த ராதிகா ஆப்தே அதிர்ச்சி அடைந்து உள்ளார். தனது பெயரில் போலியாக அந்த ஆபாச சி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டும் அவர் இதுகுறித்து போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மாவீரன் கிட்டு - 4 கெட்டப்புகளில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால்
இந்தப் படத்தில் நாயகியாக ஸ்ரீதிவ்யாவும், முக்கியமான வேடங்களில் பார்த்திபன், சூரியும் நடித்துள்ளனர். இன்னும் சில தினங்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது.
1985 காலகட்டத்தில் தமிழக உரிமைக்காகப் போராடிய மாவீரன் ஒருவனின் கதையாம் இது. ஈழத்தமிழர்கள் பற்றியது கிடையாது என சுசீந்திரன் கூறியுள்ளார்.
படத்தின் முதல்பாதி எடிட்டிங் முடிந்துள்ளது. அடுத்த மாதம் படத்தை விளம்பரப்படுத்தி நவம்பரில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்