புதிய படம் ஒன்றில் கவனம் செலுத்தும் விக்ரம்
விக்ரம் நடிப்பு, ஆனந்த் ஷங்கர் இயக்கம் என்பதால் படத்துக்கு நல்ல கூட்டம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் குறை வைக்கவில்லை. படம் முதல் நாளில் ஐந்து கோடிகளைத் தாண்டி வசூலித்தது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் எப்படியும் கூட்டம் இருக்கும். திங்கள்கிழமை ஒருநாள் மட்டுமே வேலைநாள். அடுத்த நாள் பக்ரீத் பண்டிகை... விடுமுறை.
இருமுகனுக்கு அடுத்து சாமி 2 என்று ஆடியோ லான்ஞ்சிலேயே அறிவித்து ஃபைனான்ஸ் பார்த்துவிட்டார் ஷிபு தமீம்ஸ். ஆனால் ஹரி இன்னும் எஸ்3 யை முடிக்கவில்லை. தீபாவளிக்குத்தான் எஸ்3 ரிலீஸ். அதன் பின்னர் ப்ரீ புரடக்ஷனுக்கு மூன்று மாதமாவது தேவைப்படும். எனவே அதற்குள் ஒரு படம் நடித்துவிடலாம் என திட்டமிடுகிறார் விக்ரம். அதன் இயக்குனர் சாக்ரடீஸ். விரைவில் விக்ரமை அடுத்த படத்திலும் எதிர்பார்க்கலாம்.
செப்.22 வெளியாகிறது தனுஷின் தொடரி
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தொடரி, கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் தாமதமாகி வந்தது. இந்நிலையில் படத்தை முடித்து தணிக்கைக்கு அனுப்பினர். படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பட வெளியீட்டை அறிவித்துள்ளனர்.
செப்டம்பர் 22 தொடரி வெளியாகிறது. பொதுவாக வெள்ளிக்கிழமைதான் படங்களை வெளியிடுவார்கள். இருமுகன் படத்தை வியாழக்கிழமை வெளியிட்டதால் அந்தப் படத்துக்கு 4 நாள் ஓபனிங் கிடைத்தது, கலெக்ஷனும் அதிகம். அதனால் தொடரியையும் 22 -ஆம் தேதி வியாழக்கிழமை வெளியிடுகின்றனர்.
23 -ஆம் தேதி விக்ரம் பிரபு நடித்துள்ள வீர சிவாஜி திரைக்கு வருகிறது.
செப். 30 அச்சம் என்பது மடமையடா ரிலீஸ்...?
நீண்டநாள் தயாரிப்பில் இருந்த அச்சம் என்பது மடமையடா சிம்பு ஒரேயொரு பாடலுக்கு கால்ஷீட் தராததால் தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. இந்நிலையில், சிம்பு மனமிரங்க, பாங்காக்கில் அந்தப் பாடலை படமாக்கினார். படத்தின் பிற வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதால், பாடலை மட்டும் எடிட் செய்து இணைத்து, படத்தை செப்டம்பர் 30 வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
செப்டம்பர் 30 வேறு படங்கள் அதிகம் இல்லாததால் படக்குழு அந்த தேதியை குறி வைத்துள்ளது. இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சரத்குமாரை சரியான நேரத்தில் பழி வாங்கிய விஷால் : வாய்பிளக்கும் கோடம்பாக்கம்
நடிகர் விஷால் டீமுக்கும், நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோருக்கும் லடாய் என்பது ஊருக்கே தெரிந்த விவகாரம். ஆனாலும், பொது இடங்களில் அதைக் காட்டிக் கொள்ளாமல் தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், நடிகர் சங்கத்தில் ஊழலில் ஈடுபட்டதாக கூறி நடிகர் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருந்த போது, ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதுகுறித்த கேள்விகளுக்கு இன்னும் அவர்கள் தரப்பில் இருந்து தெளிவான பதில் தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், அவர்கள் மீது நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதாவது, தற்போது ஊடகங்களும், செய்திதாள்களும் காவிரி நீர் தொடர்பாக, கர்நாடகாவில் நடைபெறும் வன்முறைகளை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் போது, உறுப்பினர் நீக்கம் பற்றி சரத்குமாரோ, ராதாரவியோ ஊடகங்களிடம் பேசி பரபரப்பை உண்டாக்க முடியாது.
எனவே இதுதான் சரியான நேரம் என்று விஷால் பழிவாங்கியுள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றனர்.
என்ன ஒரு ராஜதந்திரம்...
திடீரென பாய்ந்து முத்தமிட்ட நாயகனுக்கு பளார் விட்ட நாயகி
டி.எஸ்.திவாகரன் இயக்கத்தில் வளர்ந்துவரும் படம் மெய்மை. ரஜின்,வித்யாஸ்ரீ என்ற முது முகங்கள் கதையின் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.
இந்த படத்தில் ஒரு காட்சியில் கதா நாயகியை நாயகன் கட்டிப்பிடித்து முத்தமிடவேண்டும் என்றும், அந்த காட்சி தத்ரூபமாக அமையவேண்டும் என்பதால் நாயகிக்கு தெரியாமல் திடீரென கட்டிபிடித்து முத்தமிடவேண்டும் என்று இயக்குனர் நாயகனிடம் ரகசியமாக கூறினாராம்.
இதையடுத்து கதாநாயகன் ரஜின் திடீரென நாயகியை அணைத்து முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வித்யாஸ்ரீ யாரும் எதிர்ப்பாராதவிதமாக பளார்’ என்று நாயகனை கன்னத்தில் அறைந்துவிட்டார். ஓடி வந்த இயக்குனரும், கேமராமேனும் நிலைமையை விளக்கி சொன்னதும் நாயகனிடம் நாயகி மன்னிப்பு கேட்டார்.
இதனால் படப்பிடிப்பில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது