‘பச்சை என்கிற காத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் கீரா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள படம் ‘மெர்லின்’.
ஜே.எஸ்.பி. பிலிம்ஸ் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு பிரியனும் கதாநாயகியாக ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்துள்ள அஸ்வினியும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் தங்கர் பச்சான், மனோபாலா, மு.களஞ்சியம், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘லொள்ளு சபா’ ஜீவா, சிங்கம் புலி, ‘கயல்’ தேவராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். ‘அட்டகத்தி’ தினேஷ் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீஸர் மற்றும் ப்ரோமோ சாங் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், தங்கர்பச்சான், வசந்தபாலன், மகிழ் திருமேனி, மீரா கதிரவன், தாமிரா நடிகர்கள் ஆரி, சிங்கம் புலி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் வசந்த பாலன்,
“நண்பன் நா. முத்துக்குமார் இறந்த பின்னர் சிரிக்க மறந்திருந்தேன். சிங்கம் புலியின் பேச்சு என்னை சிரிக்க வைத்தது. மிக மோசமான கால கட்டத்தில் இன்று நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு தலைக் காதலால் பெண்களைக் கொலை செய்கிறார்கள். இந்த சூழலில் இயக்குனர்கள் பொறுப்பாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம், என்றார்
‘கபாலி’ பட இயக்குநர் ரஞ்சித் பேசும் போது,
“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சினிமா வந்து அந்த காலகட்டத்தை புரட்டிப் போடும். பராசக்தியில் அதைப் பார்த்தோம். இப்போது பேய்ப் படங்கள் ஒரு பக்கம் ஓடினாலும் “காக்கா முட்டை, ஜோக்கர்” மாதிரியான சமூக முரண்பாடுகளைப் பேசும் படங்களும் மக்களை சென்று சேருகிறது.
மெர்லின் படத்தின் டீஸர் மற்றும் ப்ரோமோ பாடலை பார்த்தேன், பிரமாதமாக வந்திருக்கிறது. மற்ற பேய்ப் படங்களைக் காட்டிலும் மெர்லின் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.
மேலும் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர்கள் தங்கர்பச்சான், தமிரா, மகிழ் திருமேனி உட்பட அனைவரும் “மெர்லின் படம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்பதற்கு இப்படத்தின் டீஸரும், ப்ரோமோ சாங்கும் சான்றாக அமைந்துள்ளது,” என்று பாராட்டு தெரிவித்தனர்.
மெர்லின், ஒரு உதவி இயக்குனரின் உண்மைப் பேய்க் கதை !
ஜே.எஸ்.பி.பிலிம்ஸ் ஸ்டுடியோ சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் படம் ‘மெர்லின்’.
கீரா இயக்கும் இந்தப் படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். விஷ்ணுப்ரியன், அஸ்வினி, முருகதாஸ், லொல்லுசபா ஜீவா, சிங்கம்புலி, மனோபாலா, தங்கர்பச்சான், மு.களஞ்சியம், ரிசா, ‘நான் மகான் அல்ல’ ராமச்சந்திரன், ஆதவன், ‘கயல்’தேவராஜ், வினோத், ஆதித்யா, கம்பம் மீனா, வீரசந்தானம், வைசாலி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் இயக்குனரான கீராவின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
“மெர்லின்’ ஒரு அழகான திரில்லர் பேய் கதை. 3 கால கட்டங்களில் நடக்கிற கதை. கதைப்படி ஹீரோ வெற்றி எப்படியாவது இயக்குனர் ஆக வேண்டும் என்று வாய்ப்பு தேடுகிறார்.
தினேஷ் நடிக்க பவர்ஸ்டார் தயாரிப்பில் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. கதையின் கரு பிடித்து போவதால் ஒரு வாரத்திற்குள் முழுக் கதையையும் சொல்ல வேண்டும் என நடிகர் தினேஷ் கூறுவதால் கதை எழுத அறையிலேயே இருக்கிறார் வெற்றி.
அவர் கதை எழுதத் தொடங்கிய பின் நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் அடிக்கடி வந்து போவதால் கவனம் சிதறுகிறது. இந்த அன்புத் தொல்லையில் இருந்து தப்பிக்க அந்த வீட்டில் கன்னிப் பேய் இருப்பதாக ஒரு பொய்க் கதையை அவிழ்த்து விடுகிறார் வெற்றி.
அதோடு அந்தக் கதைய வீட்டின் கீழே இருக்கும் வயதான பாட்டி சொன்னதாகவும், உண்மையை சொல்லிவிட்டதால் எந்த நேரமும், தான் அந்த பேயால் கொல்லப்படலாம் எனவும் சொல்லியிருந்த பாட்டி திடீரென இறந்து போக, இந்த பேய்க் கதையைக் கேட்ட நண்பர்கள் அதிர்ச்சியடை ந்து அந்த வீட்டுப்பக்கம் வருவதையே நிறுத்தி விடுகிறார்கள்.
வெற்றி பொய்யாக உருவாக்கிய பேய் கதை நிஜமானதாஸ கதையை எழுதி முடித்தாராஸ உண்மையில் பேய் என்ற ஒன்று இருக்கிறதாஸ இதற்கெல்லாம் விடை சொல்வதுதான் மெர்லின் கதை.
வழக்கமான பேய்ப் படம் போல இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் கீரா.