சூர்யா, விக்னேஷ் சிவன், அனிருத் – முதல் முறை கூட்டணி
                  
                     06 Sep,2016
                  
                  
                     
					  
                     
						
			  
			  
              

நடிகர் சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘எஸ் 3’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.
இந்தப் படத்தை அடுத்து அவர் பா.ரஞ்சித் அல்லது முத்தையா இயக்கத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது.
ஆனால், ‘நானும் ரௌடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். சூர்யா நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல் முறை.
சூர்யா, விக்னேஷ் சிவன், அனிருத் கூட்டணி முதன் முறை இணைந்துள்ள இந்தப் படம் சூர்யாவின் 35வது படமாகும்.
படத்தின் நாயகி யார் என்பது பற்றி அறிவிப்பு வெளியாகவில்லைஸஒரு வேளை நயன்தாராவாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனென்றால் படத்தை இயக்குவது விக்னேஷ் சிவன் ஆயிற்றேஸ!!