
அதிமுகவில் நயன்தாரா: அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றால் அங்கு ரசிகர்கள் அலை மோதும். நயன்தாராவுக்கு தமிழகத்தில் இருக்கும் இந்த ரசிகர் பட்டாளத்தை பார்த்து அரசியல் கட்சிகளே மிரண்டு போய் விட்டன.
இதனால் பல கட்சிகள் அவரை தங்கள் கட்சியில் சேர்க்க முயற்சி செய்தன. ஆனால் நயன்தாரா அவற்றை தவிர்த்தே வந்தார். பொதுவாக நடிகை நயன்தாரா தான் நடித்த படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கே வரமாட்டார். அப்படிப்பட்ட நயன்தாரா அம்மா சம்பந்தப்பட்ட விழாவில் பங்கேற்றதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
சென்னையில் அம்மா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு, அம்மா அவார்ட்ஸ் என்ற விருதை முதல்வர் ஜெயலலிதா பெயரில் வழங்கியது. இந்த விழாவுக்கு வந்து வீரர்களுக்கு விருதை வழங்கியவர் நயன்தாரா.
வழியெங்கும் அதிமுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டு, அதிமுக கொடி பறக்கும் கார்கள் புடை சூழ வந்து இறங்கிய நயன்தாரா அதிமுகவில் இணைவார் பேசிக்கொள்கிறார்கள்
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றால் அங்கு ரசிகர்கள் அலை மோதும். நயன்தாராவுக்கு தமிழகத்தில் இருக்கும் இந்த ரசிகர் பட்டாளத்தை பார்த்து அரசியல் கட்சிகளே மிரண்டு போய் விட்டன.
இதனால் பல கட்சிகள் அவரை தங்கள் கட்சியில் சேர்க்க முயற்சி செய்தன. ஆனால் நயன்தாரா அவற்றை தவிர்த்தே வந்தார். பொதுவாக நடிகை நயன்தாரா தான் நடித்த படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கே வரமாட்டார். அப்படிப்பட்ட நயன்தாரா அம்மா சம்பந்தப்பட்ட விழாவில் பங்கேற்றதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
சென்னையில் அம்மா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு, அம்மா அவார்ட்ஸ் என்ற விருதை முதல்வர் ஜெயலலிதா பெயரில் வழங்கியது. இந்த விழாவுக்கு வந்து வீரர்களுக்கு விருதை வழங்கியவர் நயன்தாரா.
வழியெங்கும் அதிமுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டு, அதிமுக கொடி பறக்கும் கார்கள் புடை சூழ வந்து இறங்கிய நயன்தாரா அதிமுகவில் இணைவார் பேசிக்கொள்கிறார்கள்

22 துணை நடிகர்-நடிகைகளுக்கு நோட்டீசு: நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு
சென்னையில் உள்ள நடிகர் சங்கம் எதிரில் துணை நடிகர்-நடிகைகள் சிலர் முற்றுகை போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் சங்க நிர்வாகிகள் மீது அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுளையும் கூறினார்கள்.
இதுபோல் நடிகர் சங்க உறுப்பினரான வாராகி என்பவர் நடிகர் சங்க கட்டிட நிதி வசூலுக்காக நடத்தப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறினார்.
இதற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர். உறுப்பினர்கள் நலனுக்காக பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு வரும் தங்கள் மீது சிலரது தூண்டுதலால் இந்த குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது செயற்குழுவை கூட்டி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தனர்.
நடிகர் சங்க தலைவர் நாசர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் சென்று சங்க அலுவலகம் முன்னால் திரண்டு மிரட்டல் விடுத்த வாராகி, சங்கையா, எஸ்.ராஜு, எம்.உஷா, கோவை லட்சுமி, வி.அகிலா, ஜே.பி.ராணி, ஆர்.தேவி, வி.ஜெயந்தி, எம்.சோலைமணி, ஏ.வீரமணி, வி.முரளி, பி.சந்தியா, கே.எஸ்.ரஜினி ஆர்.தேவேந்திரன், எஸ்.மலர்க்கொடி, கே.பொன்னுசாமி ஆகியோர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தார். நடிகர் சங்கத்தின் மீது உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் செயற்குழுவை கூட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நடிகர் சங்க நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். அதிருப்தி கோஷ்டியின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. நடிகர் சங்க அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தியவர்கள் உள்பட 22 பேரை சங்கத்தில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த 22 பேருக்கும் முதல் கட்டமாக, “சங்கத்தில் இருந்து உங்களை ஏன் நீக்க கூடாது?” என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படுகிறது. இதுபற்றிய தீர்மானத்தை செயற்குழுவில் நிறைவேற்றி உடனடியாக நோட்டீசை அனுப்புகின்றனர்.
இதற்காக வருகிற 10-ந்தேதி சென்னையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிற

ஸ்ருதியின் அம்மாவாகும் ராதிகா
நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் அம்மா, தங்கமகனில் தனுஷின் அம்மா, மீண்டும் தர்மதுரையில் விஜய் சேதுபதியின் அம்மா.
எஸ் 3 படத்தில் ராதிகா ஸ்ருதியின் அம்மாவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா நடித்துவரும் எஸ் 3 படத்தில் ஸ்ருதிக்கு முக்கியமான வேடம். அவரது அம்மாவாக ராதிகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
ராதிகா அம்மாவாக நடிப்பதால் அந்த கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மதுபோதையில் கார் விபத்து வழக்கில் அருண் விஜய் கைதாகி விடுதலை
தமிழ் சினிமாவில் வளரும் நடிகராக விளங்குபவர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். இவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஸ்டார் ஹோட்டலில் நேற்று நடிகை ராதிகா சரத்குமார் மகளின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு தனது சொகுசு காரில் அவர் வீட்டிற்கு திரும்பினார்.
நுங்கம்பாக்கம் பகுதியில் வேகமாக சென்ற அவர் சாலையில் நின்றிருந்த காவல் துறையினரின் வாகனத்தில் மோதியுள்ளார். காரில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்பின் தனக்கு நெஞ்சுவலி என்று கூறிவிட்டு அங்கிருந்த சென்ற அருண் விஜய், போலீஸ் நிலையத்திற்கு திரும்பவே இல்லையாம். அவரின் தந்தை விஜயகுமார் மட்டும் வந்து காவல் துறையினரிடம் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த காவல் துறையினர், அருண் விஜய் காவல்நிலையத்திற்கு நேரில் வர வேண்டும். இல்லையெனில் அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அவர் ஓட்டிவந்த ஆடி காரையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் பரங்கிமலையில் உள்ள தென்சென்னை போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் அருண் விஜய் சரண் அடைந்தார். விசாரணைக்குப் பின்னர் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

வரலட்சுமியுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்
ராதிகாவின் மகள் ரேயானின் திருமணத்தில் கலந்து கொள்ளாத வரலட்சுமி விஷாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உற்சாகமாக கலந்து கொண்டார்.
கஸ்தூரிபாய் மருத்துவமனையில் கேக் வெட்டிய விஷால் முதலில் ஊட்டிவிட்டது வரலட்சுமிக்குதான். பிறந்தநாளில் விஷாலுடன் கூடவே இருந்த வரலட்சுமி அவருடனே உணவு உண்டார்.
கல்யாண சாப்பாடு எப்போது...?
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்