
மலையாளத்தில் மம்முட்டி ஜோடியான சினேகா
அறிமுக இயக்குனரின், கிரேட் ஃபாதர் என்ற படத்தில் மம்முட்டி நடிக்கிறார். அதில் மம்முட்டியின் மனைவியாக நடிக்கிறார் சினேகா. இதுவொரு ஃபேமிலி த்ரில்லர். அடுத்த வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
சினேகாவுக்கு முன்பு, தேவயானி, மீனா உள்பட பல நடிகைகள், குழந்தை பெற்றுக் கொண்ட பின்பும் மோகன்லால் உள்பட பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

’கமலை தமிழக அரசு ஏன் பாராட்டவில்லை’ - கொந்தளிக்கும் சீமான்
தமிழகத்தில் நடிகர் திலகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே வருது வழங்கப்படுவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் உட்பட நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால், இதுவரை தமிழக அரசு சார்பில் இருந்து எந்தவிதமான அறிவிப்புகளோ, வாழ்த்துச் செய்திகளோ வெளியிடப்படவில்லை. இதற்கு இயக்குநரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான், செவாலியர் விருதுக்காக திரையுலகமே அவரைச் சந்தித்துப் பாராட்டுகையில், தமிழக அரசிடம் இருந்து மனதார ஒரு வாழ்த்துச் செய்தியோ, பரிசுகளையோ ஏன் அறிவிக்கவில்லை என்றும் கமல்ஹாசனை தனிச்சொத்தாகப் பார்க்கக் கூடாது. ஒட்டுமொத்த தேசத்தின் சொத்தாகத்தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், சமூகப் பற்றுள்ள கலைஞன் கமல்ஹாசன் என்றும் எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்காக அரசுக்கு இணையாக அவர் பங்காற்றியிருக்கிறார். பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உடை, காலணி வாங்கித் தருகிறார். ஏழை மக்களுக்கு அரிசி வாங்கித் தருகிறார். பொறுப்புள்ள ஒரு கலைஞனை அங்கீகரிப்பது தேசத்தின் பெருமை என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்
.

கே.வி.ஆனந்த் படத்துக்காக காலை காயப்படுத்திய விஜய் சேதுபதி
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இந்த மாத ஆரம்பத்தில் முடிந்தது. அந்த படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதியின் காலில் காயம்பட்டது. 'நீ கேப்' அணிந்துதான் மீதி காட்சிகளில் நடித்தார்.
அந்த காயத்துடன்தான் றெக்க படத்தின் பாடல் காட்சிக்காக பாங்காக் சென்றார் விஜய் சேதுபதி. அங்கு ஒரு பாடல் காட்சியை படமாக்கினர்.
அகராதியில் சின்சியர் என்பதற்கு விஜய் சேதுபதி என்று பொருள் தரலாம்

இந்த தீபாவளி தல தளபதி பர்ஸ்ட் லுக் தீபாவளி!!!
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோரை வைத்து பரதன் 'விஜய் 60' படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு 75 சதவீதம் முடிந்துவிட்டது. மறுபக்கம் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'தல 57' படத்தில் அஜீத் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் அஜீத்தின் மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் அஜீத்தின் பார்ட்னராக நடிக்கிறார்.
இரண்டு படங்களுமே இந்த தீபாவளிக்கு ரிலீஸாக வாய்ப்பு இல்லை. ஆனால் தல, தளபதி படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் தலைப்பு ஆகியவை தீபாவளி அன்று வெளியாகக்கூடும் என்று கூறப்படுகிறது.
எதுக்கும் தீபாவளி வர காத்திருப்போம்....

நான் உள்ளாடைகள் அணிய மாட்டேன் : நடிகை ஓபன் டாக்
அதன்பின், தமிழில் கணிதன், கதகளி, ருத்ரமா தேவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பெண்களுக்கான ஆடை கடை ஒன்றை அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். அந்த விழாவில் அவர் பேசியதாவது:
எனக்கு உள்ளாடைகள் அணியவே பிடிக்காது. 12 வயது வரைக்கும் நான் உள்ளாடை அணிந்ததே கிடையாது. இதற்காக, என் அம்மாவிடம் நான் நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன். அதன் பின் பொறுமையாக பேசி என்னிடம் உள்ளாடை அணிவதின் முக்கியத்துவத்தை என் தாய் புரிய வைத்தார். அதன்பின் நான் உள்ளாடைகள் அணிய ஆரம்பித்தேன்.
அதேபோல் ஒவ்வொரு தாயும், தங்களுடைய குழந்தைகளுக்கு உள்ளாடை அணிவதின் அவசியத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.