விஜயிடம் 400 கோடி கேட்கும் அமலாபால் – அதிரும் கோலிவுட்
நடிகர் மோகன்லாலும் இயக்குனர் விஜய் தரப்பில் அமலாவிடம் சமரசம் பேசியதாக தகவல் வெளியானது. ஆனால் அமலாபால் தன் நிலையில் இருந்து இறங்கி வருவதாக தெரியவில்லை. நீதிமன்றம் சென்றால், வழக்கு நீண்ட நாட்கள் நடக்கும் என்று, நினைத்த, அமலாபால் தரப்பு, பிரச்சனையை விரைவாக முடித்து, நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனால், சத்தமில்லாமல் இருவரும் பிரிந்துவிட, விஜையிடம் அமலாபால் தரப்பில் 400 கோடி எதிர் பார்ப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளதை கேட்டு கோடம்பாக்கம் அதிர்ந்து போய் உள்ளது.
படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரிடமிருந்து தப்பிய சரத்குமார் பட நாயகி
1993ஆம் ஆண்டும் வெளியான படம் ஐ லவ் இந்தியா. இதில் நடிகர் சரத்குமாருக்கு கதாநாயகியாக நடித்தவர் டிஸ்கா சோப்ரா. அதன் பின் இவர் தமிழில் நடிக்கவில்லை. இந்திக்கு போனார். பெரிய வாய்ப்புகள் இல்லை. அதன்பின் நடிகர் அமீர்கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்” படத்தில் நடித்தார்.
அவர் சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பற்றி சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:
எனக்கு சரியான வாய்ப்பில்லாத நேரத்தில் ஒரு தயாரிப்பாளர் என்னை அழைத்தார். எனக்கு பட வாய்ப்பும் கொடுத்தார். ஆனால், அவர் படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் படவாய்ப்பு கொடுப்பார் என்று என்னை பயமுறுத்தினார்கள். சரி சமாளிப்போம் என்று முடிவெடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அவருடைய மனைவியுடன் நெருங்கி பழகினேன். அப்படி இருந்தால் என்னை அவர் படுக்கைக்கு அழைக்க மாட்டார் என நினைத்தேன்.
படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. எனக்கும், அந்த தயாரிப்பாளருக்கும் அருகருகே அறைகள் ஒதுக்கப்பட்டது. அப்போதே எனக்கு பயம் ஆரம்பித்துவிட்டது. அன்று இரவு என்னை அவர் அறைக்கு அழைத்தார். போகாமல் இருக்க முடியாது என்பதால் சென்றேன்.
ஆனால், ஹோட்டல் ஊழியர்களிடம் கூறி அவரது அறைக்கு அடிக்கடி கால் செய்யும் படி கூறிவிட்டு சென்று விட்டேன். அவர்களும் நான் கூறியது போல் செய்ய, அவர் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார். அந்த இடைவெளியில் அவரிடமிருந்து தப்பி விட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.
இப்போதைக்கு வேலையை மட்டுமே காதலிக்கிறேன் - விஷாலுக்கு வரலட்சுமியின் நெத்தியடி பதில்
இந்நிலையில், என்னுடைய திருமணம் புதிதாக கட்டவிருக்கும் நடிகர் சங்க கட்டிடத்தில் நடைபெறும். அதற்காக, திருமண மண்டபத்தை புக் செய்து வைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார் விஷால். அதனைத் தொடர்ந்து மீண்டும் விஷால் - வரலட்சுமி திருமணச் செய்தி சூடுபிடித்தது. அதற்கு நெத்தியடி பதில் ஒன்றை ட்விட்டரில் கூறியுள்ளார் வரலட்சுமி.
இப்போதைக்கு யாரையும் நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. என்னுடைய வேலையை மட்டுமே காதலிக்கிறேன். எனவே, என்னுடைய திருமண செய்தி பற்றி யாரும் வதந்திகளை பரப்பவேண்டாம் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
வரலட்சுமியின் இந்த நோ என்ட்ரிக்கு விஷால் என்ன பதில் சொல்லப் போகிறார்?
நயன்தாராவின் திருநாள் ஏமாற்றத்தை சமன் செய்த பாபு பங்காரம்
பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா நடித்த தெலுங்குப் படம் பாபு பங்காரம். வெங்கடேஷ் ஹீரோ. இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. மேலும், ஒரு பாடல் காட்சியில் நடிக்க மறுத்தார் எனவும் கூறப்பட்டது. இந்த வதந்திகளை படத்தின் தயாரிப்பாளர் நாகா வம்சி மறுத்தார். நயன்தாரா ரொம்பவும் ஒத்துழைப்பு தந்தார், தேதிகளை அட்ஜஸ்ட் செய்தார் என்று பாராட்டினார் அவர்.
இந்நிலையில், கடந்த 12 -ஆம் தேதி பாபு பங்காரம் வெளியானது. தமிழில் செல்வி என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டனர். ஒருவாரம் கடந்த நிலையில், படம் சூப்பர்ஹிட் என்று அறிவித்துள்ளார் நாகா வம்சி. முதல் வார இறுதியில் படம் 25 கோடிகளை வசூலித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நயன்தாராவை பொறுத்தவரை திருநாள் தோல்வியை பாபு பங்காரத்தின் வெற்றி சமன் செய்துள்ளது
மீண்டும் ரஜினியை வம்பிக்கிழுத்த வர்மா
இந்தமுறை ரஜினியை நடிகர் சுதீப்புடன் ஒப்பிட்டிருக்கிறார் வர்மா. சுதீப்பின் முடிஞ்சா இவன புடி கன்னடத்தில் கோட்டிபாபா 2 என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த வர்மா, உங்க பெயரை கிச்சா சுதீப் என்பதற்கு பதில் ரஜினி சுதீப் என்று மாற்றிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
அத்துடன் ரஜினி ஒரேவிதமான கதாபாத்திரங்களில்தான் நடிக்கிறார். ஆனா, நீங்கள் பன்முகத்தன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்கள். ரோபோ படத்தை தூங்கிக் கொண்டே நீங்கள் செய்யலாம். ஆனால், ஈகா போன்ற படத்தை ரஜினியால் கனவிலும் செய்ய முடியாது என ரஜினியை ஒரேயடியாக வாரியுள்ளார்.
அதேபோல் கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தனையும் கிண்டல் செய்துள்ளார் வர்மா. சுதீப்புடன் ஒப்பிட்டால் விஷ்ணுவர்தன் வெறும் கத்துக்குட்டி என வர்மா வர்ணித்துள்ளார்.
வர்மாவின் பாராட்டை ஏற்றுக் கொண்ட சுதீப், ரஜினி, விஷ்ணுவர்தன் ஆகியோரின் பக்கத்தில்கூட தன்னால் வர முடியாது, அவர்களுடன் தன்னை ஒப்பிடவும் முடியாது என்று பணிவுடன் பதிலளித்துள்ளார்
வேந்தர் மூவிஸ் மதனை ஆகஸ்டு 30ம் தேதிக்குள் ஆஜர்படுத்துவோம் : போலீசார் உறுதி
மதன் கடந்த மே மாதம், கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீரென மாயமானார். அவர் நேபாளம் பகுதியில் தங்கியிருக்கலாம் என்று கருதிய போலீசார், அங்கு சென்று அவரை தேடினர். ஆனாலும் இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி, அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த புதன் கிழமை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, தனிப்படை அதிகாரிகள், தங்களது புலன் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தனர்.
அதை ஆய்வு செய்த நீதிபதி கூறிய போது “ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு 70 நாள்கள் ஆகிவிட்டது. இதுவரை போலீசாரின் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. எஸ்.ஆர்.எம் கல்லூரியில் சேர்க்கை வாங்கி தருவதாக மாணவர்களிடம் பணம் வாங்கி பலர் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், போலீசார் ஒருவரையும் இதுவரை விசாரிக்கவில்லை.
தமிழக போலீசார் இந்த வழக்கை திறம்பட விசாரணை செய்யவில்லை எனில், வேறு ஒரு புலன் விசாரணை அமைப்பிடம் வழக்கு ஒப்படைக்கப்படும். வருகிற 30ஆம் தேதிக்குள் மதனை கண்டுபிடித்து போலீசார் ஒப்படைக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.
ஆகஸ்டு 30ஆம் தேதிக்குள் மதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று போலீசாரும் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளனர்